Close Menu
    What's Hot

    பழிவாங்கல் நடவடிக்கையாகவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!- நிரபராதி என நிரூபிப்பேன்- எ.வ.வேலு

    ஏஐ புயலில் சிக்கிய இந்திய ஐடி துறை… என்னவாகும் எதிர்காலம்?

    சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பதவி… அதிருப்தியாளர்களை வளைத்துப்போட்டு இபிஎஸ் அதிரடி!
    Featured

    எஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பதவி… அதிருப்தியாளர்களை வளைத்துப்போட்டு இபிஎஸ் அதிரடி!

    Editor web2By Editor web2June 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 eps vs spv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், அதிருப்தி கோஷ்டியைத் தன் வசம் தக்கவைத்துக் கொள்ளும் உத்தியாகவும், அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி இன்று அதிரடியான புதிய பதவி நியமனங்களை அறிவித்துள்ளார்.

    வேலுமணி, நத்தம் விஸ்வநாதனுக்கு முக்கிய பதவி

    அதிமுகவில் மிக முக்கியப் பதவிகளான  துணைப் பொதுச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் இரா. விசுவநாதன் ஆகியோர் மீண்டும் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளனர். கொங்கு மண்டலத்தின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் வேலுமணிக்கு மீண்டும் கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதன் மூலம் அவரை சமாதானப்படுத்தி உள்ளார் எடப்பாடி.

    அதேபோல், முன்னாள் அமைச்சர் வரகூர் அ. அருணாசலம் கழகத்தின் புதிய தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் மிக முக்கியப் பொறுப்பான கழக அமைப்புச் செயலாளர்களாக பி. தங்கமணி, கே.சி. கருப்பணன், எஸ்.பி. சண்முகநாதன், கே.பி. அன்பழகன், ஆர். காமராஜ், கே.சி. வீரமணி, பி. பாலகிருஷ்ண ரெட்டி, கோ. அரி, சி. கிருஷ்ணமுரளி, ஆர்.பி. மருதராஜா மற்றும் பி. சௌந்தர்ராஜன் உள்ளிட்ட 11 மூத்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஏமாற்றத்திற்குப் பின் நிகழ்ந்த சமரசம்

    அண்மையில் அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பிய நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் ஒரு குரூப் அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கொடி பிடித்தனர். மேலும், அவர்கள் தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசுக்குத் தங்களின் மறைமுக ஆதரவையும் சட்டசபையில் தெரிவித்தனர்.

    ஆனால், தவெக அமைச்சரவையில் தங்களுக்கு எதிர்பார்த்தபடி எந்தவொரு இடமும் கிடைக்காததால், வேலுமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் ஏமாற்றமடைந்தனர். தவெக தரப்பில் இருந்து எந்தவொரு சாதகமான சமிக்ஞையும் வராத நிலையில், வேறு வழியின்றி மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் அவர்கள் சமரசமாகினர்.

    இதனையடுத்து தங்களை நோக்கி நகர்ந்த அதிருப்திக் குழுவை அப்படியே வளைத்துப்போட்டு, கட்சியை உடைப்பில் இருந்து காப்பாற்றும் நோக்கிலேயே, அதிருப்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இந்த பதவிகளை வழங்கி உள்ளதாக தெரிகிறது.

    AIADMK EdappadiPalaniswami SPVelumani TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெள்ளை அறிக்கையில் தவறான தகவல்கள்!- மின்சாரத்துறை அமைச்சருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!
    Next Article ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!
    Editor web2
    • Website

    Related Posts

    பழிவாங்கல் நடவடிக்கையாகவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!- நிரபராதி என நிரூபிப்பேன்- எ.வ.வேலு

    June 25, 2026

    ஏஐ புயலில் சிக்கிய இந்திய ஐடி துறை… என்னவாகும் எதிர்காலம்?

    June 25, 2026

    சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழிவாங்கல் நடவடிக்கையாகவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!- நிரபராதி என நிரூபிப்பேன்- எ.வ.வேலு

    ஏஐ புயலில் சிக்கிய இந்திய ஐடி துறை… என்னவாகும் எதிர்காலம்?

    சொத்துக்குவிப்பு வழக்கு: தாமதத்தினால் தப்பிய கீதா ஜீவன்

    நீதிமன்ற உத்தரவை மீறினாரா? அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக வழக்கு

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.