Close Menu
    What's Hot

    சிவப்பு துண்டை இகழ்ந்தால் இரட்டைப் போர் யானை பதிலடி கொடுக்கும்..!! அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்..!!

    நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! CM விஜய் தொடங்கி வைக்கும் ஏரியா எது தெரியுமா..??

    போதைப்பொருள் எதிர்ப்பு: முதல்வர் எழுதிய விழிப்புணர்வு வாசகம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழ்நாடு முழுவதும் சொட்டு மருந்து சிறப்பு முகாம்..! 28ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு..!
    Featured

    தமிழ்நாடு முழுவதும் சொட்டு மருந்து சிறப்பு முகாம்..! 28ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு..!

    Editor web4By Editor web4June 26, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 17
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு முழுவதும் வரும் 28-ம் தேதி சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

    ”தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் 28 ஜூன் 2026 அரசு (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

    இம்மையங்களில் 52.91 லட்சம் 0–5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஏற்கனவே 0-5 வயதுடைய குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

    முகாம் நடைபெறும் நாட்களில் முக்கியப் பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சுங்கச் சாவடிகள், சோதனைச் சாவடிகள் மற்றும் விமான நிலையங்களில் தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும். முதல் நாளான 28.06.2026 அன்று அனைத்து முகாம்களிலும், 29.06.2026 மற்றும் 30.06.2026 ஆகிய இரண்டு நாட்களில் தற்காலிக மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பிறமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் வசிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து முகாம்களில் வழங்கப்படும்.

    நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலமாக தொலைதூர மற்றும் எளிதில் செல்ல இயலாத பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கும் போலியோ மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி 5 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை இட்டுக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    polio drops special camp tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாம் விளையாடுவது தான் இனி பாடமாக இருக்கும்..! 3கி.மீ ஓடிய ஒரே முதல்வர் விஜய்..! ஆதவ் அர்ஜூனா பேச்சு..!
    Next Article 2 நாட்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு!
    Editor web4

    Related Posts

    சிவப்பு துண்டை இகழ்ந்தால் இரட்டைப் போர் யானை பதிலடி கொடுக்கும்..!! அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்..!!

    June 26, 2026

    நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! CM விஜய் தொடங்கி வைக்கும் ஏரியா எது தெரியுமா..??

    June 26, 2026

    போதைப்பொருள் எதிர்ப்பு: முதல்வர் எழுதிய விழிப்புணர்வு வாசகம்!

    June 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சிவப்பு துண்டை இகழ்ந்தால் இரட்டைப் போர் யானை பதிலடி கொடுக்கும்..!! அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்..!!

    நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! CM விஜய் தொடங்கி வைக்கும் ஏரியா எது தெரியுமா..??

    போதைப்பொருள் எதிர்ப்பு: முதல்வர் எழுதிய விழிப்புணர்வு வாசகம்!

    தூய்மை பணியாளர்களுக்காக பணிந்தது தவெக அரசு..!! தனியார் மயத்தை கைவிட்ட தமிழக அரசு..!!

    திமுக கூட்டணியை விட்டு வெளியேறுகிறதா மதிமுக..?? நாளை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.