திமுக கூட்டணியில் இருந்து, மதிமுக வெளியேறுமா இல்லை கூட்டணியில் தொடருமா என்பது குறித்து இன்று நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படுகிறது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆகியவை தவெகவுக்கு ஆதரவளித்ததன் மூலம் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளன.
மதிமுகவின் அண்மைகால நடவடிக்கைகளும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறலாம் எனக் கூறப்படுகிறதும். இது தொடர்பாக ஜூன் 27ல் (இன்று) நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறி வந்தார்.
இந்த நிலையில் ஜூன் 26-இல், ம.தி.மு.க., உயர்நிலைக்குழு கூட்டம், அக்கட்சி அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜுனன் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்தது.
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, முதன்மை செயலர் துரை வைகோ, பொருளாளர் செந்திலதிபன் உள்பட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில், திமுக கூட்டணியில் மதிமுகவை ஒரு பொருட்டாகக் கருதவில்லை எனவும், 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியதோடு உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என நெருக்கடி தரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் வைகோவுக்கு இரண்டாவது முறையாக ராஜ்யசபா எம்.பி பதவியை வழங்காததோடு, மதிமுவையும், வைகோவையும் அவமதித்ததாகக் கருதுவததாகவே தெரிவித்துள்ளனர்.
இதனால் இன்று சென்னை அண்ணா நகரில் நடைபெறும் மதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது, தவெகவுக்கு ஆதரவு அளிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.
நேற்றைய உயர்நிலைக் கூட்டத்தில் மதிமுக எம்.எல்.ஏக்கள் இருவரில் கடையநல்லூர் எம்.எல்.ஏ ராஜேந்திரன் மட்டுமே பங்கேற்றுள்ளார். சீர்காழி தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில்செல்வன், மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
