Close Menu
    What's Hot

    வெனிசுலாவை புரட்டிப் போட்ட நிலநடுக்கங்கள்..! பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வு..!

    திமுகவை பாஜக பாதையில் இழுத்து செல்கிறார் ஆ.ராசா – அமைச்சர் வன்னியரசு அட்டாக்!  

    அயர்லாந்திடம் இந்தியா தோல்விக்கு என்ன காரணம்? – அபிஷேக் சர்மா விளக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உள்ளே – வெளியே  ஆட்டம் : மதிமுக பொதுக்குழுவில் இன்று முடிவு?
    Featured

    உள்ளே – வெளியே  ஆட்டம் : மதிமுக பொதுக்குழுவில் இன்று முடிவு?

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 mdmk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக கூட்டணியில் இருந்து, மதிமுக வெளியேறுமா இல்லை கூட்டணியில் தொடருமா என்பது குறித்து இன்று நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படுகிறது.

    திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆகியவை தவெகவுக்கு ஆதரவளித்ததன் மூலம் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளன.

    மதிமுகவின் அண்மைகால நடவடிக்கைகளும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறலாம் எனக் கூறப்படுகிறதும். இது தொடர்பாக ஜூன் 27ல் (இன்று) நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறி வந்தார்.

    இந்த நிலையில் ஜூன் 26-இல், ம.தி.மு.க., உயர்நிலைக்குழு கூட்டம், அக்கட்சி அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜுனன் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்தது.

    ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, முதன்மை செயலர் துரை வைகோ, பொருளாளர் செந்திலதிபன் உள்பட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    001 mdmk A

    இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில், திமுக கூட்டணியில் மதிமுகவை ஒரு பொருட்டாகக் கருதவில்லை எனவும்,  4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியதோடு உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என நெருக்கடி தரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் வைகோவுக்கு இரண்டாவது முறையாக ராஜ்யசபா எம்.பி பதவியை வழங்காததோடு, மதிமுவையும், வைகோவையும் அவமதித்ததாகக் கருதுவததாகவே தெரிவித்துள்ளனர்.

    இதனால் இன்று சென்னை அண்ணா நகரில் நடைபெறும் மதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது, தவெகவுக்கு ஆதரவு அளிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.
    நேற்றைய உயர்நிலைக் கூட்டத்தில் மதிமுக எம்.எல்.ஏக்கள் இருவரில் கடையநல்லூர் எம்.எல்.ஏ ராஜேந்திரன் மட்டுமே பங்கேற்றுள்ளார். சீர்காழி தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில்செல்வன், மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

    MDMK MDMK General Council MDMK General Council 2026 Vaiko
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோதைப் பொருள் பயன்படுத்தினேனா? வைரல் வீடியோவுக்கு அமைச்சர் விளக்கம்!
    Next Article பனாமா அணிக்கு எதிரான போட்டி: ரீஸ் ஜேம்ஸ் இல்லாமல் களமிறங்கும் இங்கிலாந்து
    Editor TN Talks

    Related Posts

    வெனிசுலாவை புரட்டிப் போட்ட நிலநடுக்கங்கள்..! பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வு..!

    June 27, 2026

    திமுகவை பாஜக பாதையில் இழுத்து செல்கிறார் ஆ.ராசா – அமைச்சர் வன்னியரசு அட்டாக்!  

    June 27, 2026

    அயர்லாந்திடம் இந்தியா தோல்விக்கு என்ன காரணம்? – அபிஷேக் சர்மா விளக்கம்

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெனிசுலாவை புரட்டிப் போட்ட நிலநடுக்கங்கள்..! பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வு..!

    திமுகவை பாஜக பாதையில் இழுத்து செல்கிறார் ஆ.ராசா – அமைச்சர் வன்னியரசு அட்டாக்!  

    அயர்லாந்திடம் இந்தியா தோல்விக்கு என்ன காரணம்? – அபிஷேக் சர்மா விளக்கம்

    FIH ப்ரோ லீக்: பரம எதிரி பாகிஸ்தானை 7-1 என சிதறடித்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி

    செஷல்ஸ் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி; 3 நாள் அரசு முறை பயணம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.