Close Menu
    What's Hot

    இயக்குனர் கே.பாக்யராஜின் திரைப்பயணம்

    சமூக சீர்திருத்த கருத்துகளைப் பரப்பியவர் பாக்யராஜ்..!! கே.எஸ் ரவிக்குமார் புகழாரம்..!!

    காற்றில் கலந்தார் நடிகர், இயக்குநர் பாக்யராஜ்..!! இபிஎஸ் , நயினார் நாகேந்திரன் இரங்கல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வெனிசுலாவை புரட்டிப் போட்ட நிலநடுக்கங்கள்..! பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வு..!
    Featured

    வெனிசுலாவை புரட்டிப் போட்ட நிலநடுக்கங்கள்..! பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வு..!

    Editor web4By Editor web4June 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 24
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வெனிசுலாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சக்தி வாய்ந்த 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு 7.1, 7.5 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால், வெனிசுலா நகரமே உருக்குலைந்து போயுள்ளது.

    தலைநகர் கராகசில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாகுவைரா நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகர் உட்பட நாடு முழுவதையும் புரட்டிப் போட்டுள்ளது. பல அடுக்குமாடி கட்டடங்கள் அடியோடு இடிந்து விழுந்துள்ளன. இந்த இடிபாடுகளில் சிக்கி பலர் மாயமாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    அதேப் போல நாட்டின் முக்கிய சர்வதேச நிலையமான வெனிசுலாவின் மைகுயெட்டியா விமான நிலையம் சேதமடைந்து மூடப்பட்டுள்ளது. சாலைகள் இரண்டாக பிளந்து, சலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கி சேதம் அடைந்தன. பொதுமக்கள் பலர் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

    பேரழிவின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அந்நாட்டின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தேசிய அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனிடையே வெனிசுலா அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அந்நாட்டுக்கு தேவைப்படும் உதவிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் கிரிஸ்டோபர் லண்டாவ் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

    அண்டை நாடுகளான பிரேசில், எல் சல்வடார், கியூபா, டொமினிகன் குடியரசு உள்ளிட்டவை உடனடியாக பேரிடர்கால மீட்பு உதவிகளை அனுப்பி வைத்துள்ளன. இந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை 920 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 3,360 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், 50,000 பேர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால் இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கணிக்கப்படுகிறது.

    earthquake venezuela worldnews
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுகவை பாஜக பாதையில் இழுத்து செல்கிறார் ஆ.ராசா – அமைச்சர் வன்னியரசு அட்டாக்!  
    Next Article தூத்துக்குடி : திருமணமான ஒரே மாதத்தில்..! கழுகுமலை உச்சியில் இருந்து தவறி விழுந்த இளம் பெண்..!
    Editor web4

    Related Posts

    இயக்குனர் கே.பாக்யராஜின் திரைப்பயணம்

    June 27, 2026

    சமூக சீர்திருத்த கருத்துகளைப் பரப்பியவர் பாக்யராஜ்..!! கே.எஸ் ரவிக்குமார் புகழாரம்..!!

    June 27, 2026

    காற்றில் கலந்தார் நடிகர், இயக்குநர் பாக்யராஜ்..!! இபிஎஸ் , நயினார் நாகேந்திரன் இரங்கல்..!!

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இயக்குனர் கே.பாக்யராஜின் திரைப்பயணம்

    சமூக சீர்திருத்த கருத்துகளைப் பரப்பியவர் பாக்யராஜ்..!! கே.எஸ் ரவிக்குமார் புகழாரம்..!!

    காற்றில் கலந்தார் நடிகர், இயக்குநர் பாக்யராஜ்..!! இபிஎஸ் , நயினார் நாகேந்திரன் இரங்கல்..!!

    கொல்கத்தா கட்டிட விபத்து..!! உயிரிழப்பு 16 ஆக உயர்வு..!! தொடரும் மீட்புப்பணி..!!

    சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்..!! ஒரு கை பார்த்துடலாம்.. போட்டியிடுகிறார் சீமான்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.