Close Menu
    What's Hot

    நடிகர், இயக்குநர் பாக்யராஜ் காலமானார் – மாரடைப்பால் உயிர் பிரிந்தது

    வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா? – விஜய் அரசுக்கு பிரேமலதா கேள்வி

    முதுகுளத்தூர் அருகே 5000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால முதுமக்கள் தாழிகள், மட்கலக் குறியீடுகள் கண்டெடுப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திமுகவை பாஜக பாதையில் இழுத்து செல்கிறார் ஆ.ராசா – அமைச்சர் வன்னியரசு அட்டாக்!  
    Featured

    திமுகவை பாஜக பாதையில் இழுத்து செல்கிறார் ஆ.ராசா – அமைச்சர் வன்னியரசு அட்டாக்!  

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 vanniarasu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தோல்வியடைந்த மனநிலையில் இருக்கும் ஆ.ராசா, திமுகவை பாஜக பாதையில் இழுத்துச் செல்வதாக அமைச்சர் வன்னியரசு விமர்சித்துள்ளார்.

    ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுக்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சீ.ம. ரமேஷ் கர்ணா, வாலாஜாபேட்டையில் உள்ள சுங்க சாவடியில் சிறப்பான வரவேற்பு அளித்தார்

    இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார்

    அப்போது, தூய்மைப் பணியாளர்களை தனியார் மயமாக்கும் போக்கினை தமிழக அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில் தமிழக முதல்வர் அதனை ரத்து செய்து இருப்பதை மிகவும் வரவேற்பதாகவும் மேலும் திருமாவளவன் தூய்மைப் பணியாளர்களுக்காக கொடுத்த அறிக்கையில் காரணமாகவே தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா திருமாவளவனுக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்து இருந்ததாக தெரிவித்தார்.

    திருமாவளவன் கொடுத்த ஆக்கபூர்வமான அறிக்கையை தமிழக முதல்வர் ஏற்றுக்கொண்டு இருப்பதால் தாவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா விமர்சனத்தை புறக்கணிப்பதாக தெரிவித்த அமைச்சர் வன்னியரசு,

    தாட்கோ வங்கி கடன் பெறுவதில் நடைமுறை சிக்கல்கள் இருந்து வரும் நிலையில் அதனை  எளிமைப்படுத்தி விண்ணப்பித்த அனைத்து பயனாளிகளுக்கும் விரைவாக கிடைக்கு வகையில் திட்டம் வகுக்கப்பட இருப்பதாகவும் அதனை விரைவில் நடைமுறைப்படுத்த போவதாகவும் தெரிவித்தார்

    ஆ ராசா தேர்தல் தோல்வி அடைந்த நிலையில் மிகுந்த மன உளைச்சல் அடைந்து பலவிதமான உளறல்களை பேசி வருவதாகக் கூறிய அமைச்சர் வன்னியரசு, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகளை தாக்குதல் நடத்துவது மூலமாக திமுக என்ற பேர் இயக்கத்தை பாஜக போன்று பாதையில் இழுத்து செல்கிறாரோ என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதாக விமர்சித்தார்.

    திராவிடக் கொள்கைகளை வலிமையாக அழுத்தமாக பின்பற்றி வரும் இயக்கம் விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள். இந்த நிலையில் விடுதலை சிறுத்தை மற்றும் இடதுசாரி கட்சிகளின் மீது விமர்சனங்கள் வைப்பது மற்றும் அவதூறு கொட்டுவது என்பதன் மூலம் ஆ ராசா என்ன சொல்ல வருகிறார் என கேள்வி எழுப்பியவர்,

    விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளை விமர்சிப்பதன் மூலம் திமுகவை பாஜக பக்கம் ஆ.ராசா இழுத்து செல்கிறாரா என்ற பின்னணியில்தான் அவர் செயல்படுகிறார் என்றம் காரணம் எழுந்துள்ளது என கூறினார்.

    தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இடதுசாரி கட்சிகளின் கொள்கைகளை முன்வைத்து ஆட்சி நடத்தி வருகிறார் .

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சமூக நீதி சாதி வாரி கணக்கெடுப்பு கொள்கையை முன்வைத்து முதலமைச்சரை சந்தித்து வருகிறார். அதில் எந்த தவறும் கிடையாது. விடுதலை சிறுத்தை கட்சியின் கொள்கையும் கோட்பாடும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது. அதுதான் ஆகவே அன்புமணி ராமதாஸ் முதலமைச்சரை சந்திப்பதும் நெருக்கமாக இருப்பதும் எந்த ஒரு தவறும் இல்லை என தெரிவித்தார்.

    தமிழக முழுவதும் அம்பேத்கர் வெண்கல சிலை வைப்பதற்காக கோரிக்கை மனு வழங்கப்பட்டு இருப்பதன் மீது பரிசீலனை செய்து சிலைகள் வைப்பதற்கான நடைமுறைகளை எளிமையாக்கும் திட்டம் வகுக்கப்பட்டு விரைவில் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

    A Raja BJP DMK Tamil Nadu Politics VanniArasu VCK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅயர்லாந்திடம் இந்தியா தோல்விக்கு என்ன காரணம்? – அபிஷேக் சர்மா விளக்கம்
    Next Article வெனிசுலாவை புரட்டிப் போட்ட நிலநடுக்கங்கள்..! பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வு..!
    Editor TN Talks

    Related Posts

    நடிகர், இயக்குநர் பாக்யராஜ் காலமானார் – மாரடைப்பால் உயிர் பிரிந்தது

    June 27, 2026

    வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா? – விஜய் அரசுக்கு பிரேமலதா கேள்வி

    June 27, 2026

    முதுகுளத்தூர் அருகே 5000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால முதுமக்கள் தாழிகள், மட்கலக் குறியீடுகள் கண்டெடுப்பு

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நடிகர், இயக்குநர் பாக்யராஜ் காலமானார் – மாரடைப்பால் உயிர் பிரிந்தது

    வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா? – விஜய் அரசுக்கு பிரேமலதா கேள்வி

    முதுகுளத்தூர் அருகே 5000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால முதுமக்கள் தாழிகள், மட்கலக் குறியீடுகள் கண்டெடுப்பு

    புதுச்சேரி : சொத்துக்காக பெற்றோரை கொலை செய்த இளம்பெண்..! காதலனுடன் புதுச்சேரியில் கைது..!

    தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி கர்நாடகாவுக்கு ஆதரவாகச் செயல்படுவாரா? கனிமொழி எம்.பி சந்தேகம்.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.