Close Menu
    What's Hot

    நடிகர், இயக்குநர் பாக்யராஜ் காலமானார் – மாரடைப்பால் உயிர் பிரிந்தது

    வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா? – விஜய் அரசுக்கு பிரேமலதா கேள்வி

    முதுகுளத்தூர் அருகே 5000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால முதுமக்கள் தாழிகள், மட்கலக் குறியீடுகள் கண்டெடுப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அயர்லாந்திடம் இந்தியா தோல்விக்கு என்ன காரணம்? – அபிஷேக் சர்மா விளக்கம்
    Featured

    அயர்லாந்திடம் இந்தியா தோல்விக்கு என்ன காரணம்? – அபிஷேக் சர்மா விளக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 abisheik sharma
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு, அங்குள்ள ஆடுகள நிலை மற்றும் சூழலுக்கு விரைவாக தங்களை மாற்றிக்கொள்ள முடியாததே முக்கிய காரணம் என்று இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தெரிவித்தார்.

    தொடர்ச்சியாக போட்டிகள் நடைபெறும் நெருக்கடியான அட்டவணையில், குறைந்த பயிற்சி நேரத்திலேயே மைதான சூழலுக்கு விரைவாக ஏற்படுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.

    பெல்ஃபாஸ்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் டி20 போட்டியில், அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது. டி20 உலக சாம்பியனான இந்தியாவை எந்த வடிவிலான கிரிக்கெட்டிலும் முதன்முறையாக அயர்லாந்து வென்றது இதுவே முதல் முறை.

    போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அபிஷேக் சர்மா, “ஒரு அணியாக நாம் எவ்வளவு விரைவாக ஆடுகள நிலைக்கு ஏற்ப மாறுகிறோம் என்பதுதான் முக்கியம். தொடர்ந்து போட்டிகள் நடைபெறும்போது, கிடைக்கும் குறுகிய பயிற்சி நேரத்திலேயே சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப விளையாட வேண்டும். வலுவான அணியாக இருந்தால் அதற்கு விரைவாக தகுந்து கொள்ள வேண்டும். இன்று அதற்கான முயற்சியை மேற்கொண்டோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது பலனளிக்கவில்லை,” என்றார்.

    இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, கேப்டன் லார்கன் டக்கர் அரைசதம் அடித்ததன் உதவியுடன் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது.

    183 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் நட்சத்திர பேட்டிங் வரிசை அயர்லாந்தின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா மட்டும் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். இருப்பினும், மற்ற பேட்ஸ்மேன்கள் ஏமாற்றமளித்தனர்.

    அயர்லாந்து தரப்பில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மேத்யூ ஹம்ப்ரீஸ் மற்றும் மேட் ஹாலார்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அறிமுக வீரர் ஜெய் மூன்றா 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    இரு அணிகளும் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதவுள்ளன.

    Abhishek Sharma IND vs IRE India Cricket Team India vs Ireland Ireland Cricket Team
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleFIH ப்ரோ லீக்: பரம எதிரி பாகிஸ்தானை 7-1 என சிதறடித்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி
    Next Article திமுகவை பாஜக பாதையில் இழுத்து செல்கிறார் ஆ.ராசா – அமைச்சர் வன்னியரசு அட்டாக்!  
    Editor TN Talks

    Related Posts

    நடிகர், இயக்குநர் பாக்யராஜ் காலமானார் – மாரடைப்பால் உயிர் பிரிந்தது

    June 27, 2026

    வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா? – விஜய் அரசுக்கு பிரேமலதா கேள்வி

    June 27, 2026

    முதுகுளத்தூர் அருகே 5000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால முதுமக்கள் தாழிகள், மட்கலக் குறியீடுகள் கண்டெடுப்பு

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நடிகர், இயக்குநர் பாக்யராஜ் காலமானார் – மாரடைப்பால் உயிர் பிரிந்தது

    வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா? – விஜய் அரசுக்கு பிரேமலதா கேள்வி

    முதுகுளத்தூர் அருகே 5000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால முதுமக்கள் தாழிகள், மட்கலக் குறியீடுகள் கண்டெடுப்பு

    புதுச்சேரி : சொத்துக்காக பெற்றோரை கொலை செய்த இளம்பெண்..! காதலனுடன் புதுச்சேரியில் கைது..!

    தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி கர்நாடகாவுக்கு ஆதரவாகச் செயல்படுவாரா? கனிமொழி எம்.பி சந்தேகம்.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.