Close Menu
    What's Hot

    MLA-க்கள் purchase; Washing Machine அரசியல் – தவெகவுக்கு மக்கள் பாடம்; உதயநிதி

    விம்பிள்டனின் ‘மிகவும் அழகிய வீராங்கனை’!. இந்த ஆண்டு விளையாடாதது ஏன்?

    தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில்  உருவாகும் ” திருக்குறள் 2 ” –  இன்று பூஜையுடன் படப்பிடிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»விழுந்தது 6-வது விக்கெட்; அதிமுக எம்.எல்.ஏ எம்.ஆர். விஜயபாஸ்கரும் ராஜினாமா?
    அரசியல்

    விழுந்தது 6-வது விக்கெட்; அதிமுக எம்.எல்.ஏ எம்.ஆர். விஜயபாஸ்கரும் ராஜினாமா?

    Editor TN TalksBy Editor TN TalksJune 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 MR VIJAY
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், 6-வதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    ச.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் தொடங்கிய நாள் முதல் அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

    மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபிரியா, இசக்கி சுப்பையா, ஆகிய 4  அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைந்துள்ளனர். டாக்டர் விஜயபாஸ்கர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்னும் தவெகவில் இணையவில்லை.

    இந்த நிலையில், அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இதனை மெய்ப்பிப்பதுபோல் அவர் காலை தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்தார்.

    பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரன் அறைக்கு சென்றவர் சபாநாயகர் வரத் தாமதமானதால் அங்கு காத்திருந்தார். அவரை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ பதவி விலகலுக்கான கடிதத்தை வழங்க உள்ளார்.

    இதையடுத்து வரும் வியாழக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கர் இணைவார் எனக் கூறப்படுகிறது.

    ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-வது MLA-வாக தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.

    தவெக பொது செயலாளர் ஆனந்த் முன்னிலையில் நடைபெறவுள்ள இணைப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் சேர்ந்து கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தொண்டர்களும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கரும் பதவியை ராஜினாமா செய்தால், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 41 ஆக குறையும்.

    மேலும், திருச்சி கிழக்கு தொகுதியையும் சேர்த்து தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயரவுள்ளது. இதனால் மாநில அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

    AIADMK M.R. Vijayabaskar MLA Resignation
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபூதாகரமானது ரூ.100 கோடி மோசடி வழக்கு..!! Ex.அமைச்சர் சிவசங்கருக்கு பறந்த சம்மன்..!!
    Next Article தவெக அரசு அராஜகம்; திமுகவினர் கைதுக்கு எதிராக கனிமொழி!
    Editor TN Talks

    Related Posts

    MLA-க்கள் purchase; Washing Machine அரசியல் – தவெகவுக்கு மக்கள் பாடம்; உதயநிதி

    June 29, 2026

    விம்பிள்டனின் ‘மிகவும் அழகிய வீராங்கனை’!. இந்த ஆண்டு விளையாடாதது ஏன்?

    June 29, 2026

    தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில்  உருவாகும் ” திருக்குறள் 2 ” –  இன்று பூஜையுடன் படப்பிடிப்பு

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    MLA-க்கள் purchase; Washing Machine அரசியல் – தவெகவுக்கு மக்கள் பாடம்; உதயநிதி

    விம்பிள்டனின் ‘மிகவும் அழகிய வீராங்கனை’!. இந்த ஆண்டு விளையாடாதது ஏன்?

    தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில்  உருவாகும் ” திருக்குறள் 2 ” –  இன்று பூஜையுடன் படப்பிடிப்பு

    அயர்லாந்து தொடரில் சூர்யவன்ஷிக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை?. பயிற்சியாளர் விளக்கம்!.

    பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் சந்திப்பு..!! ஜூலை 2-வது வாரத்தில் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.