Close Menu
    What's Hot

    மீண்டும் மதமாற்ற தடைசட்டம்? – பாஜக அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் தவெக – திமுக காட்டம்

    ” பால் வினியோகத்தைக் குறைத்து மக்களை  தண்டிக்கக்கலாமா ஆவின்?” – அன்புமணி காட்டம்

    CBSE மும்மொழித் திட்டத்தில் மாறுதல்: பெற்றோர் எதிர்ப்பால் பணிந்தது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»துணைவேந்தர் நியமன அதிகாரத்தை  எதிர்த்த வழக்கு; இறுதி விசாரணை  தள்ளிவைப்பு
    Featured

    துணைவேந்தர் நியமன அதிகாரத்தை  எதிர்த்த வழக்கு; இறுதி விசாரணை  தள்ளிவைப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJune 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    015 V C
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டத்தை எதிர்த்த வழக்கின் இறுதி விசாரணையை, சென்னை உயர்நீதிமன்றம், ஜூலை 29 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசின் இந்த  சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. தடையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தடையை நீக்கியதுடன், பிரதான வழக்கை விசாரிக்கும்படி உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

    வழக்கில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,  துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை நிர்வாக வசதிக்காக மாநில அரசுக்கு வழங்கியதை பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளுக்கு முரண்பாடானது என கூறமுடியாது; பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை பின்பற்றியே துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்; பல்கலைக்கழங்கள் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது; துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி சட்டம் இயற்றியதன் காரணமாக கல்வியின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன்  அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் பதில்மனுவுக்கு பதிலளிக்க மனுதாரர் தரப்பிலும், பல்கலைக்கழக மானியக் குழு தரப்பிலும் பதிலளிக்க அவகாசம் வழங்கக் கோரப்பட்டது.

    இதை ஏற்றுக் கொண்டு, வழக்கை இறுதி விசாரணைக்காக ஜூலை 29 ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதற்குள் அனைத்து தரப்பினரும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

    court case Final Hearing High Court VC Appointment
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“இது வெறும் டிரைலர்தான்… ” – எச்சரிக்கும் சேகர் பாபு
    Next Article அயோத்தி ராமர் கோவில் பண மோசடி வழக்கு!. வாதாடும் வழக்கறிஞர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்!
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் மதமாற்ற தடைசட்டம்? – பாஜக அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் தவெக – திமுக காட்டம்

    June 29, 2026

    ” பால் வினியோகத்தைக் குறைத்து மக்களை  தண்டிக்கக்கலாமா ஆவின்?” – அன்புமணி காட்டம்

    June 29, 2026

    CBSE மும்மொழித் திட்டத்தில் மாறுதல்: பெற்றோர் எதிர்ப்பால் பணிந்தது

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் மதமாற்ற தடைசட்டம்? – பாஜக அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் தவெக – திமுக காட்டம்

    ” பால் வினியோகத்தைக் குறைத்து மக்களை  தண்டிக்கக்கலாமா ஆவின்?” – அன்புமணி காட்டம்

    CBSE மும்மொழித் திட்டத்தில் மாறுதல்: பெற்றோர் எதிர்ப்பால் பணிந்தது

    ”அப்பாவுக்கு மரியாதை… அம்மாவிடம் ஆறுதல்…” –   விஜய் குறித்து சாந்தனு நெகிழ்ச்சி

    நலத்திட்ட உதவியாக ரேஷன் அரிசி – விசாரணை நடத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.