Close Menu
    What's Hot

    மீண்டும் மதமாற்ற தடைசட்டம்? – பாஜக அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் தவெக – திமுக காட்டம்

    ” பால் வினியோகத்தைக் குறைத்து மக்களை  தண்டிக்கக்கலாமா ஆவின்?” – அன்புமணி காட்டம்

    CBSE மும்மொழித் திட்டத்தில் மாறுதல்: பெற்றோர் எதிர்ப்பால் பணிந்தது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»முன்னாள் கமிஷனர் அருணுக்கு எதிரான வழக்கு:  நீதிமன்றம் பச்சைக்கொடி?
    தமிழ்நாடு

    முன்னாள் கமிஷனர் அருணுக்கு எதிரான வழக்கு:  நீதிமன்றம் பச்சைக்கொடி?

    Editor web2By Editor web2June 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Arun IPS
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முன்னாள் சென்னை மாநகர காவல்துறை ஆணையரும், தற்போதைய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) இயக்குநருமான அருண் ஐபிஎஸ் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அவர் தனது மனுவில், சென்னை காவல் ஆணையராக இருந்தபோது அருண் ஐபிஎஸ் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பலர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தை பிரயோகித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், குண்டர் தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக அருண் ஐபிஎஸ் மீது சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே கடுமையான கருத்துகளை பதிவு செய்திருந்த போதிலும், தமிழக அரசு அவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காமல், மாறாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் இயக்குநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, உயர்நீதிமன்றத்தின் முந்தைய கருத்துகளின் அடிப்படையில் அருண் ஐபிஎஸ் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு பட்டியலிடக் கோரி சவுக்கு சங்கர் தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. அந்த முறையீட்டை பரிசீலித்த தலைமை நீதிபதி அமர்வு, மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

    ArunIPS CBI MadrasHighCourt SavukkuShankar
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅயோத்தி ராமர் கோவில் பண மோசடி வழக்கு!. வாதாடும் வழக்கறிஞர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்!
    Next Article ராஜினாமா எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்க மனுக்களை சபாநாயகர் தொடர்ந்து விசாரிப்பார்; சட்டமன்ற செயலாளர் தகவல்
    Editor web2
    • Website

    Related Posts

    மீண்டும் மதமாற்ற தடைசட்டம்? – பாஜக அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் தவெக – திமுக காட்டம்

    June 29, 2026

    ” பால் வினியோகத்தைக் குறைத்து மக்களை  தண்டிக்கக்கலாமா ஆவின்?” – அன்புமணி காட்டம்

    June 29, 2026

    CBSE மும்மொழித் திட்டத்தில் மாறுதல்: பெற்றோர் எதிர்ப்பால் பணிந்தது

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் மதமாற்ற தடைசட்டம்? – பாஜக அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் தவெக – திமுக காட்டம்

    ” பால் வினியோகத்தைக் குறைத்து மக்களை  தண்டிக்கக்கலாமா ஆவின்?” – அன்புமணி காட்டம்

    CBSE மும்மொழித் திட்டத்தில் மாறுதல்: பெற்றோர் எதிர்ப்பால் பணிந்தது

    ”அப்பாவுக்கு மரியாதை… அம்மாவிடம் ஆறுதல்…” –   விஜய் குறித்து சாந்தனு நெகிழ்ச்சி

    நலத்திட்ட உதவியாக ரேஷன் அரிசி – விசாரணை நடத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.