Close Menu
    What's Hot

    “ராமதாஸ் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரே…” – பாமக அருள் வேதனை

    இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜகவுக்கு தவெக அரசு துணையா? – திமுக கேள்வி

    தங்கத்தை விற்க திடீர் போட்டி… மக்களின் இலாப கணக்கு என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»” பால் வினியோகத்தைக் குறைத்து மக்களை  தண்டிக்கக்கலாமா ஆவின்?” – அன்புமணி காட்டம்
    அரசியல்

    ” பால் வினியோகத்தைக் குறைத்து மக்களை  தண்டிக்கக்கலாமா ஆவின்?” – அன்புமணி காட்டம்

    Editor web2By Editor web2June 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Aavin factory
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் பெருமளவில் வீழ்ச்சி அடைந்திருப்பதால் சந்தையில் ஆவின் பாலுக்கு பெரும் தட்டுப்பாட்டு  ஏற்பட்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தினமும் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது 13.50 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது. ஆவின்  நிறுவனத்தின் பால் கொள்முதல் தினமும்  28 லட்சம் லிட்டர் என்ற அளவுக்கு முறைந்து விட்டது தான் ஆவின் பால் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு காரணம் ஆகும்.

    2023-ஆம் ஆண்டில் 30 லட்சம் லிட்டர் என குறைந்த  ஆவின் பால் கொள்முதல் இப்போது 28 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது. ஆவின் பால் வினியோகம் குறைந்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அரசுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால்  விலைக்கும், தனியார் நிறுவன பால் விலைக்கும் இடையே லிட்டருக்கு  ரூ.16 முதல் ரூ.24 வரை அதிகம் ஆகும்.  தனியார் நிறுவன  பாலை அதிக விலை கொடுத்து வாங்க முடியாத மக்களுக்கு வரப்பிரசாதமாக ஆவின் பால் அமைந்துள்ளது.  பால் வினியோகத்தைக் குறைந்து அந்த மக்களை ஆவின் தண்டிக்கக்கூடாது.

    008 anbumani

    ஆவின் பால்கொள்முதல் 13 லட்சம் லிட்டர் குறைந்திருப்பதற்கு காரணம் அதன் கொள்முதல் விலைகள் உயர்த்தப்படாதது தான்.  பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35 , எருமைப்பாலுக்கு  லிட்டர் ஒன்றுக்கு ரூ.44  என்ற அளவில் ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலையுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள்  அதை விட லிட்டருக்கு 12 வரை கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றன.  அதற்கு இணையாக ஆவின்  நிறுவனமும் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் அதன் கொள்முதலை  அதிகரிக்க முடியாது.

    ஆவின் நிறுவனத்தின்  பால் கொள்முதலை  அதிகரிப்பதற்காக அதன்  கொள்முதல் விலையை பசும்பாலுக்கு 1 லிட்டருக்கு ரூ.45. எருமை பாலுக்கு ரூ.54 என  உயர்த்துவதற்கும்,  அதன் மூலம் அதிக  அளவிலான பாலை கொள்முதல் செய்து நியாயமான  முறையில் மக்களுக்கு வழங்கவும்  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

    Aavin AnbumaniRamadoss MilkSupply
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleCBSE மும்மொழித் திட்டத்தில் மாறுதல்: பெற்றோர் எதிர்ப்பால் பணிந்தது
    Next Article மீண்டும் மதமாற்ற தடைசட்டம்? – பாஜக அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் தவெக – திமுக காட்டம்
    Editor web2
    • Website

    Related Posts

    “ராமதாஸ் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரே…” – பாமக அருள் வேதனை

    June 29, 2026

    இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜகவுக்கு தவெக அரசு துணையா? – திமுக கேள்வி

    June 29, 2026

    எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவுக்கு அதிருப்தி; திருச்சி  கிழக்கில் போட்டியா? – திருமாவளவன் பதில்

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “ராமதாஸ் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரே…” – பாமக அருள் வேதனை

    இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜகவுக்கு தவெக அரசு துணையா? – திமுக கேள்வி

    தங்கத்தை விற்க திடீர் போட்டி… மக்களின் இலாப கணக்கு என்ன?

    எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவுக்கு அதிருப்தி; திருச்சி  கிழக்கில் போட்டியா? – திருமாவளவன் பதில்

    மீண்டும் மதமாற்ற தடைசட்டம்? – பாஜக அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் தவெக – திமுக காட்டம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.