Close Menu
    What's Hot

    பிறந்து ஒரு மணிநேரமே ஆன ஆண் குழந்தை!. புதரில் வீசி சென்ற அவலம்!. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

    இன்று ரமேஷுக்கு தர்ம அடி; நாளை தவெக நிர்வாகிகளுக்கு – தமிழக வெற்றிக் கழகமல்ல, பாலியல் வெறிக் கழகம் – திமுக கடும் தாக்கு!

    ‘நலம் TN’ சேவை, மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமனம், புதிய திட்டங்கள் தொடக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மீண்டும் மதமாற்ற தடைசட்டம்? – பாஜக அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் தவெக – திமுக காட்டம்
    Featured

    மீண்டும் மதமாற்ற தடைசட்டம்? – பாஜக அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் தவெக – திமுக காட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    021 subirkhan A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாஜகவின் ‘மதமாற்ற தடைச்சட்ட’ அஜெண்டாவுக்கு தவெக துணைபோவதாக, திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு  செயலாளர் டாக்டர் அ.சுபேர்கான் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில்,

    தமிழ்நாட்டின் நீண்டநெடிய சமூகநீதி வரலாற்றில், ஒருவரின் சமூக மற்றும் கல்வி ரீதியான பின்னடைவை அடிப்படையாகக் கொண்டே உரிமைகள் தீர்மானிக்கப்பட்டு வந்துள்ளன. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் இஸ்லாமியர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதும் அந்த போராட்ட வரலாற்றின் தொடர்ச்சிதான்.

    ஆனால், இன்று தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளாலும், சட்ட ரீதியான அலட்சியத்தாலும் அந்த அடிப்படைத் தகர்க்கப்பட்டு, சிறுபான்மையினரின் உரிமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    இஸ்லாத்துக்கு மதம் மாறிய நபர், பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கேட்டு தொடர்ந்த வழக்கில், இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்கும்  அரசாணையை மதுரை கிளை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது, சமூகநீதிப் போரில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தத் தீர்ப்பின் பின்னணியில் உள்ள சட்ட நுணுக்கங்களையும், தவெக அரசு காட்டிய மெத்தனப்போக்கையும் பார்க்கும்போது, இது மறைமுகமாக பாஜகவின் ‘மதமாற்ற தடைச்சட்ட’ அஜெண்டாவுக்குத் துணைபோகிறதோ என சந்தேகம் எழுப்பியுள்ளார்.

    இப்போது ஜி.ஆர்.சுவாமிநாதன் கொடுத்த தீர்ப்பின் விளைவாக, மதம் மாறினால் இட ஒதுக்கீடு பறிப்பு என்ற தண்டனை என்ற அச்சுறுத்தலின் மூலம், அரசியலமைப்பு வழங்கியுள்ள மதச்சுதந்திரத்தைப் பறிக்கும் பாஜகவின் மறைமுக மதமாற்ற தடைச்சட்டத் திட்டத்திற்கு தவெக அரசு சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது என்பது தெளிவாகிறது எனவும்,

    அந்த அஜெண்டாக்களுக்கு இணக்கமான முதலமைச்சரின் அரசு, இணக்கமான சட்டத்துறை அமைச்சர் என தவெக அரசு பாஜகவுடன் பேணும் இணக்கம் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

    தற்போது வந்திருக்கிற நெருக்கடியிலும், திராவிட முன்னேற்ற கழகம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் வழி நின்று நம் உரிமைகளை தாரைவார்க்கும் தவெக அரசின் கள்ளத்தனமான கூட்டணியையும் அம்பலப்படுத்தி, சமூகநீதியை நிலைநாட்டி. உரிமைகளை மீட்கும் வரை எமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

    Anti Conversion Law BJP DMK TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article” பால் வினியோகத்தைக் குறைத்து மக்களை  தண்டிக்கக்கலாமா ஆவின்?” – அன்புமணி காட்டம்
    Next Article எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவுக்கு அதிருப்தி; திருச்சி  கிழக்கில் போட்டியா? – திருமாவளவன் பதில்
    Editor TN Talks

    Related Posts

    பிறந்து ஒரு மணிநேரமே ஆன ஆண் குழந்தை!. புதரில் வீசி சென்ற அவலம்!. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

    July 14, 2026

    இன்று ரமேஷுக்கு தர்ம அடி; நாளை தவெக நிர்வாகிகளுக்கு – தமிழக வெற்றிக் கழகமல்ல, பாலியல் வெறிக் கழகம் – திமுக கடும் தாக்கு!

    July 14, 2026

    ‘நலம் TN’ சேவை, மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமனம், புதிய திட்டங்கள் தொடக்கம்!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிறந்து ஒரு மணிநேரமே ஆன ஆண் குழந்தை!. புதரில் வீசி சென்ற அவலம்!. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

    இன்று ரமேஷுக்கு தர்ம அடி; நாளை தவெக நிர்வாகிகளுக்கு – தமிழக வெற்றிக் கழகமல்ல, பாலியல் வெறிக் கழகம் – திமுக கடும் தாக்கு!

    ‘நலம் TN’ சேவை, மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமனம், புதிய திட்டங்கள் தொடக்கம்!

    கரூர் : பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்த தவெக நிர்வாகி..! பெண் அளித்த புகாரால் பரபரப்பு..!

    தவெக ஆட்சியிலும் லாக் அப் மரணம்? – நாகர்கோவிலில் பரபரப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.