Close Menu
    What's Hot

    பெண்களின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு: கலெக்டர்கள் – எஸ்.பி.க்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் கறார்

    “ராமதாஸ் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரே…” – பாமக அருள் வேதனை

    இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜகவுக்கு தவெக அரசு துணையா? – திமுக கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜகவுக்கு தவெக அரசு துணையா? – திமுக கேள்வி
    Featured

    இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜகவுக்கு தவெக அரசு துணையா? – திமுக கேள்வி

    Editor web2By Editor web2June 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Court hammer 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை ரத்து செய்த மதுரை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, தவெக அரசின் சட்ட நடவடிக்கைகள் குறித்து திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அ. சுபேர்கான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமுக்கு மதம் மாறிய பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வழங்கிய 09.03.2024-ஆம் தேதி வெளியிடப்பட்ட G.O.(Ms.) No.31-ஐ நீதிமன்றம் ரத்து செய்திருப்பது சமூகநீதிக்குப் பெரிய பின்னடைவு என்றும், இந்த வழக்கில் தவெக அரசு எடுத்த மெத்தனமான அணுகுமுறை, பாஜகவின் ‘மதமாற்ற தடைச் சட்ட’ அரசியல் அஜெண்டாவுக்கு மறைமுக ஆதரவாக இருப்பதாக சந்தேகம் எழுப்புவதாகவும் கூறியுள்ளார்.

    அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவு மதச் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. ஆனால், “இஸ்லாமுக்கு மதம் மாறியவர் ஒரு முஸ்லிம் மட்டுமே; அவருக்குப் பழைய சாதி அடையாளம் இல்லை” என்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பு, சமூகப் பின்னடைவைப் புறக்கணிப்பதாக சுபேர்கான் குற்றம்சாட்டி உள்ளார்.

    மேலும், அரசாணையை பாதுகாக்க தேவையான வரலாற்றுத் தரவுகள், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைகள் உள்ளிட்ட ஆதாரங்களை அரசு நீதிமன்றத்தில் முழுமையாக தாக்கல் செய்யவில்லை என்றும், இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய முந்தைய தீர்ப்புகளுக்கு மாறான கருத்து வெளியானபோது, வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்ற வலியுறுத்த அரசுத் தரப்பு தவறிவிட்டதாகவும் அவர் கூறி உள்ளார்.

    இந்த தீர்ப்பு, மதம் மாறினால் இடஒதுக்கீடு பறிக்கப்படும் என்ற அச்சத்தை உருவாக்கி, மதச் சுதந்திரத்தை மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் பாஜக அரசியல் நோக்கத்துக்கு வழிவகுக்கும் என குற்றம்சாட்டி உள்ள சுபேர்கான், சமூகநீதியையும் சிறுபான்மையினரின் உரிமைகளையும் பாதுகாக்கும் போராட்டத்தை திமுக தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும்  தெரிவித்துள்ளார்.

    DMK Reservation SocialJustice TamilNaduPolitics TVKGovt
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கத்தை விற்க திடீர் போட்டி… மக்களின் இலாப கணக்கு என்ன?
    Next Article “ராமதாஸ் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரே…” – பாமக அருள் வேதனை
    Editor web2
    • Website

    Related Posts

    பெண்களின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு: கலெக்டர்கள் – எஸ்.பி.க்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் கறார்

    June 29, 2026

    “ராமதாஸ் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரே…” – பாமக அருள் வேதனை

    June 29, 2026

    தங்கத்தை விற்க திடீர் போட்டி… மக்களின் இலாப கணக்கு என்ன?

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண்களின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு: கலெக்டர்கள் – எஸ்.பி.க்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் கறார்

    “ராமதாஸ் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரே…” – பாமக அருள் வேதனை

    இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜகவுக்கு தவெக அரசு துணையா? – திமுக கேள்வி

    தங்கத்தை விற்க திடீர் போட்டி… மக்களின் இலாப கணக்கு என்ன?

    எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவுக்கு அதிருப்தி; திருச்சி  கிழக்கில் போட்டியா? – திருமாவளவன் பதில்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.