Close Menu
    What's Hot

    “ராமதாஸ் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரே…” – பாமக அருள் வேதனை

    இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜகவுக்கு தவெக அரசு துணையா? – திமுக கேள்வி

    தங்கத்தை விற்க திடீர் போட்டி… மக்களின் இலாப கணக்கு என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“ராமதாஸ் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரே…” – பாமக அருள் வேதனை
    Featured

    “ராமதாஸ் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரே…” – பாமக அருள் வேதனை

    Editor web2By Editor web2June 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Anbumani Ramadoss 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாமக நிறுவனர் எங்களை நட்டாற்றில் விட்டு போய்விட்டாரோ என்ற பயமும், வேதனையும் உள்ளது என பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவிய நிலையில், சமீபத்தில் இருவரும் மீண்டும் சந்தித்தனர். ராமதாஸ் – அன்புமணி இடையே இணக்கம் ஏற்பட்டுள்ள சூழலில், ராமதாஸ் அணியை சேர்ந்த நிர்வாகிகள் அடுத்த கட்டமாக என்ன செய்வது என தெரியாமல் கலக்கத்தில் உள்ளனர்.

    இந்தச் சூழலில், முன்னாள் எம்எல்ஏ அருள் தலைமையில் சேலத்தில் ராமதாஸ் அணியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இன்று ஆலோசனை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அருள், “ராமதாஸ் – அன்புமணி சந்தித்ததை மனமார வரவேற்கிறோம். ராமதாஸை நம்பி நாங்கள் பயணித்தோம், பல கோடி ரூபாயை இழந்திருக்கிறோம். சரியான வழிகாட்டுதல் இல்லையே என்ற ஏக்கத்தில் பொறுப்பாளர்கள் என்னிடம் வந்து என்ன செய்யலாம் என கேட்கிறார்கள். நீங்களே கருத்துகளை சொல்லுங்கள் எனக் கேட்டிருக்கிறோம்.

    எல்லா மாவட்டங்களில் இருந்தும் செயலாளர்கள் வருகின்றனர். அவர்களிடம் கருத்து கேட்கிறோம். சென்னையில் ஒரு நாள் அனைவரும் ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுப்போம்.

    Arul Ramadoss

    ஒன்றரை ஆண்டுக்கு முன்பே ராமதாஸ் – அன்புமணி சந்தித்திருந்தால், பாமக கட்சி அங்கீகாரம் பெற்றிருக்கும். துணை முதல்வர் பதவி கிடைத்திருக்கும். 10 – 15 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றிருப்போம். பாமகவின் 5.8 சதவீத வாக்குகள் என்பது 2 சதவீதமாக குறைந்திருக்காது. என்னைப் போன்றவர்கள் இருக்கும் சொத்தையெல்லாம் விற்று, பல கோடி ரூபாய் கடன்காரர்களாக மாறியிருக்க மாட்டார்கள். இந்த வேதனை, வருத்தம், வலி எங்களுக்கு உள்ளது.

    எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இரு நாட்களில் அறிவிப்போம். எங்களுக்கு மாணவர் பருவத்தில் இருந்து ராமதாஸை மட்டும் தான் தெரியும். அவர் எங்களை நட்டாற்றில் விட்டு போய்விட்டாரோ என்ற பயமும், வேதனையும் உள்ளது” என்றார்.

    DrRamadoss PMK PoliticalCrisis TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜகவுக்கு தவெக அரசு துணையா? – திமுக கேள்வி
    Editor web2
    • Website

    Related Posts

    இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜகவுக்கு தவெக அரசு துணையா? – திமுக கேள்வி

    June 29, 2026

    தங்கத்தை விற்க திடீர் போட்டி… மக்களின் இலாப கணக்கு என்ன?

    June 29, 2026

    எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவுக்கு அதிருப்தி; திருச்சி  கிழக்கில் போட்டியா? – திருமாவளவன் பதில்

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “ராமதாஸ் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரே…” – பாமக அருள் வேதனை

    இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜகவுக்கு தவெக அரசு துணையா? – திமுக கேள்வி

    தங்கத்தை விற்க திடீர் போட்டி… மக்களின் இலாப கணக்கு என்ன?

    எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவுக்கு அதிருப்தி; திருச்சி  கிழக்கில் போட்டியா? – திருமாவளவன் பதில்

    மீண்டும் மதமாற்ற தடைசட்டம்? – பாஜக அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் தவெக – திமுக காட்டம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.