Close Menu
    What's Hot

    பெண்களின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு: கலெக்டர்கள் – எஸ்.பி.க்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் கறார்

    “ராமதாஸ் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரே…” – பாமக அருள் வேதனை

    இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜகவுக்கு தவெக அரசு துணையா? – திமுக கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பெண்களின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு: கலெக்டர்கள் – எஸ்.பி.க்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் கறார்
    தமிழ்நாடு

    பெண்களின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு: கலெக்டர்கள் – எஸ்.பி.க்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் கறார்

    Editor web2By Editor web2June 29, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 06 29 211139
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் திங்கட்கிழமையன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய், பொதுமக்கள் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கினார்.

    மாநாட்டில் பேசிய விஜய், “ வெளிப்படையான, நேர்மையான, இலஞ்ச லாவண்யமற்ற ஒரு சமூக நீதிக்கான அரசைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்றே நம் மக்கள் முடிவு செய்துதான், நம்முடைய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிக்கெல்லாம் நாம் முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும்.

    காவல்துறை சுதந்திரமாக முடிவு செய்யலாம் சட்டம்- ஒழுங்கு பிரச்சனையைப் பொறுத்தவரை, நீங்கள் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதில் நிரபராதிகள் யாரும் தப்பித்தவறி கூட பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை நடத்துவதற்கு முன்னால், District Level Officers கூட்டத்தை ஆன்லைனில் நடத்த வேண்டும்.

    கனிவான அணுகுமுறை

    விவசாயிகள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் கூட்டத்தை முறையாக, சரியாக, கனிவோடு நடத்த வேண்டும். மனு கொடுக்க வருகிற மக்களிடம் கனிவாகக் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுடைய பிரச்சனை என்னவென்பதை புரிந்துகொண்டு உடனடியாக அதற்குரிய நடவடிக்கையை எடுத்துத் தீர்வு தர வேண்டும். மக்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு சான்றிதழ், பட்டா போன்ற அடிப்படைத் தேவைகளைக் கேட்டுதான் வருவார்கள். அப்படி வருகின்ற மக்களை, தங்கள் வீட்டில் இருக்கின்ற மனிதர்களாக நடத்தினால் போதும். அவர்கள் சந்தோஷம் அடைவார்கள். மக்களுக்கு வங்கி சேவைகள் ஒழுங்காகக் கிடைக்கிறதா என்பதை வங்கியாளர்கள் கூட்டத்தை (Bankers Meeting) நடத்தி விசாரிக்க வேண்டும்.

    Vijay 1 1 scaled

    கள ஆய்வு மேலும், திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை வேளையில் கள ஆய்வுக்குச் (Field Visit) செல்ல வேண்டும். வேலை செய்வது, மனு வாங்குவது மட்டும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் வேலையல்ல. தொடர் கண்காணிப்பு (Follow-up) மிகவும் முக்கியம். அதற்காக ஒரு அலுவலரை நியமித்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களிடம் குறையைக் கேட்பதைவிட, அதைத் தீர்ப்பது மிகவும் முக்கியம்.

    சட்டம்-ஒழுங்கு

    மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் சட்டம்-ஒழுங்கு கூட்டத்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு முக்கியமான வழக்கிலும் சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, தவறு செய்தவர்கள் தப்பித்துவிடாத வகையில் உடனடியாகத் தீர்வு கிடைப்பதற்கு சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையோடு கலந்தாலோசித்து, எந்தவொரு சம்பவமும் நடப்பதற்கு முன்னதாகவே மூலகாரணத்தைக் கண்டறிந்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இதற்காக, வருவாய்த்துறை, காவல்துறை அனைத்துத் தகவல்களையும் சேகரித்து, அதைச் சரிபார்த்து, முன்பாகவே என்ன நடக்கும் என்று கணித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.

    பெண்கள் பாதுகாப்பு

    100 சதவீதம் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் முக்கியமாகப் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் No change and No compromise. பெண்களின் பாதுகாப்பிற்கு உரிய Special Arrangements செய்தே ஆக வேண்டும். Hence, District Collectors and Superintendents of Police should pay sharp and special attention to them. Students and Children Safety-லும் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் அருகிலுள்ள கடைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் நேர்வில் அவ்வப்போது அங்கு சோதனை நடத்த வேண்டும்.

    IAS IPS conference

    போதைப்பொருள் ஒழிப்பு

    போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கித் தருவதை உறுதிப்படுத்த வேண்டும். Education is a celebration. அது எப்போது கொண்டாட்டமாக மாறும்? ஒழுக்கத்தைப் போதிக்கிற, சாதிய வேறுபாடுகளைத் தாண்டி சாதிக்கிற மாணவர்களை உருவாக்குகின்றபோதுதான் கல்வி கொண்டாட்டமாக இருக்கும். அதைக் கண்காணிப்பதும் உங்கள் கைகளில்தான் உள்ளது” எனக் கேட்டுக்கொண்டார்.

    CMVijaySpeech TNGovtUpdate WomenSafetyTN ZeroCorruption
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“ராமதாஸ் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரே…” – பாமக அருள் வேதனை
    Editor web2
    • Website

    Related Posts

    “ராமதாஸ் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரே…” – பாமக அருள் வேதனை

    June 29, 2026

    இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜகவுக்கு தவெக அரசு துணையா? – திமுக கேள்வி

    June 29, 2026

    தங்கத்தை விற்க திடீர் போட்டி… மக்களின் இலாப கணக்கு என்ன?

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண்களின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு: கலெக்டர்கள் – எஸ்.பி.க்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் கறார்

    “ராமதாஸ் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரே…” – பாமக அருள் வேதனை

    இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜகவுக்கு தவெக அரசு துணையா? – திமுக கேள்வி

    தங்கத்தை விற்க திடீர் போட்டி… மக்களின் இலாப கணக்கு என்ன?

    எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவுக்கு அதிருப்தி; திருச்சி  கிழக்கில் போட்டியா? – திருமாவளவன் பதில்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.