இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பராசக்தி. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எடுக்கப்பட்ட பீடியாட்ரிக் படமாக வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்ஷனை வசூல் செய்தது.
இந்த நிலையில், இப்படத்தில் தனக்கு சம்பள பாக்கி இருப்பதாகவும், அதனை பெற்றுத் தரக் கோரியும் இயக்குநர் சுதா கொங்கரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தனது மனுவில், ”பராசக்தி படத்திற்காக ரூ.8.39கோடி ஊதியம் வழக்கப்படவில்லை. இதனால் பராசக்தி படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் மூலம் கிடைத்த வருமானத்தின் முழு விவரங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ஜூலை 10-ம் தேதி வெளியாகவுள்ள அதர்வாவின் இதயம் முரளி திரைப்படத்தின் வெளியீட்டிற்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 8-ம் தேதி வரை இப்படத்தின் செயர்கைக் கோள் வழி வெளியீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிரான சுதா கொங்கராவின் இந்த வழக்கு விசாரணையை ஜூலை 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
