Close Menu
    What's Hot

    யஷ்-இன் ‘டாக்ஸிக்’ நாயகிகள் டீசர் வெளியீடு!. மிரட்டலான தோற்றத்தில் நடிகை நயன்தாரா!

    திமுக ஆட்சியில் ஏமாற்றப்பட்ட ஒப்பந்ததாரர்கள் தன்னிடம் புகார் அளிக்கலாம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு

    40 வருட காத்திருப்பு!. ஈக்வடாரை சாய்த்த மெக்ஸிகோ!. அடுத்த சுற்றுக்குத் தகுதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»2013-ல் நடந்த சிறுவன் கொலை வழக்கு..! பிரபல தொழிலதிபர் ஷாஜி குற்றவாளி என தீர்ப்பு..!
    Featured

    2013-ல் நடந்த சிறுவன் கொலை வழக்கு..! பிரபல தொழிலதிபர் ஷாஜி குற்றவாளி என தீர்ப்பு..!

    Editor web4By Editor web4July 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை எழும்பூர் நடைபாதையில் தூங்கிய சிறுவன் மீது சொகுசு கார் ஏற்றி மரணம் ஏற்படுத்திய வழக்கில் சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமன் குற்றவாளி என சென்னை கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

    EMPEE குழுமத்தின் தலைவர் எம்.என்.புருஷோத்தமனின் மகன் ஷாஜி. இவர் EMPEE நிறுவனத்தின் இயக்குனர் ஆவர். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் 22 தேதி சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையில் இரவு நேரங்களில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது நள்ளிரவில் மது போதையில் வந்த ஷாஜி தனது சொகுசு காரை ஏற்றி உள்ளார். இதில் 12 வயதான முனிராஜ், இடுப்பு எலும்பு முறிவு மற்றும் வயிறு பகுதியில் ஏற்பட்ட படுங்காயங்களினால் சிகிச்சை பலனின்றி மே 24 அன்று இறந்து விட்டான். இதே போல். வாசு (8), சுப ரஞ்சிதா (7), ராஜா மொகைதீன்,(19) மணி (19) ஆகிய நான்கு பேர் காயமடைந்தனர்.

    இது தொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதில் ஷாஜி, குமார் உள்ளிட்டோர் மீது கொலையாகாத மரணம், கொலை செய்யும் நோக்கம் இல்லாமல் மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு சென்னை ஏழாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்ட ஷாஜி அதி வேகமாகவும் மது போதையில் வாகன ஓட்டியது விபத்திற்கு காரணம் என மருத்துவரின் சாட்சியம் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. எனவே ஷாஜியை குற்றவாளி என அறிவித்து தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டனர்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர்கள் அரசு தரப்பு வாதங்களை நிராகரித்து வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களுக்கு பிறகும் தீர்ப்பளித்த நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட ஷாஜி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை குற்றவாளி என அறிவிப்பதாக தீர்ப்பளித்தார். ஆனால் குற்றவாளி ஷாஜி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு தண்டனை வழங்க அவருக்கு ஜாமீனில் வெளிவர கூடிய கைது வாரண்ட் பிறப்பித்தும் அவரை வரும் 15 தேதி நீதிமன்றத்தில் ஆஜார் படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

    சம்பவம் நடைபெற்று 13 ஆண்டுகளுக்கு பிறகு தொழில் அதிபர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கபட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிலிப்பைன்ஸ் : வெடித்து சிதறிய தால் எரிமலை..! 1,200 மீட்டர் உயரத்திற்கு பரவிய சாம்பல் புகை..!
    Next Article மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை போற்றத்தக்கது; முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், மருத்துவர்கள் தின வாழ்த்து
    Editor web4

    Related Posts

    யஷ்-இன் ‘டாக்ஸிக்’ நாயகிகள் டீசர் வெளியீடு!. மிரட்டலான தோற்றத்தில் நடிகை நயன்தாரா!

    July 1, 2026

    திமுக ஆட்சியில் ஏமாற்றப்பட்ட ஒப்பந்ததாரர்கள் தன்னிடம் புகார் அளிக்கலாம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு

    July 1, 2026

    40 வருட காத்திருப்பு!. ஈக்வடாரை சாய்த்த மெக்ஸிகோ!. அடுத்த சுற்றுக்குத் தகுதி!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    யஷ்-இன் ‘டாக்ஸிக்’ நாயகிகள் டீசர் வெளியீடு!. மிரட்டலான தோற்றத்தில் நடிகை நயன்தாரா!

    திமுக ஆட்சியில் ஏமாற்றப்பட்ட ஒப்பந்ததாரர்கள் தன்னிடம் புகார் அளிக்கலாம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு

    40 வருட காத்திருப்பு!. ஈக்வடாரை சாய்த்த மெக்ஸிகோ!. அடுத்த சுற்றுக்குத் தகுதி!

    தவெக MLA-வை மிரட்டி பேரம்..!! செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இருவரை தட்டித்தூக்கிய போலீஸ்..!!

    தனியார் கல்வி நிறுவனங்கள் தொடந்த வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.