மதுரை ரயில்வே நிலையத்தில் நாள்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
மதுரை ரயில்வே நிலையத்தில் ரயில்கள் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்படும். இந்நிலையில் மதுரை ரயில்வே நிலையத்தில் ரீல்ஸ் ஜோடி ஒன்று காதல் கோட்டை படத்தில் அஜித் தேவயானி வரும் கிளைமேக்ஸ் காட்சியை வைத்து ரீல்ஸ் செய்துள்ளனர்.
ரயிலில் அமர வைத்துவிட்டு பேசுவது, கமலி சூர்யா எனக் கத்துவது, சூர்யா சட்டையைக் கழட்டிவிட்டு பனியனில் ரோஜாவுக்குப் பதில் வாகைப்பூவை வரைந்து காட்டுவது, கமலியும் சூர்யாவும் அணைத்துக் கொள்வது என ரயில்நிலையத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக்கி, இந்த ஜோடி ரீல்ஸ் எடுத்தது அங்கிருந்தவர்களை, கடுப்பாக்கியுளளது.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது அதில் காதல் கோட்டையை கட்டக்கூடிய இடமா ரயில்வே நிலையம் என பல்வேறு கமெண்ட்டுகளும் வந்தவனும் உள்ளன.
இதுபோன்று ரயில்களில் ரீல்ஸ் எடுத்து வீடியோ வெளியீடு நபர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது
