Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு
    Featured

    நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    013 court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 17 பேரின் நியமனங்களை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், விதிகளை பின்பற்றி இப்பதவிகளுக்கு மீண்டும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகளின் உதவியாளர்களாக 17 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, இதுசம்பந்தமாக, சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமார் அமர்வு, உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப உதவியாளர்கள், நூலகர்கள் தட்டச்சர்கள், பதிவாளர்களின் உதவியாளர்களாக பணியாற்றியவர்கள் நீதிபதிகளின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  விதிகளின்படி, உரிய தகுதியை பெறாத நிலையில் நீதிபதிகளின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள இவர்கள், உரிய தகுதியைப் பெறுவதற்காக 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, 17 பேரின் நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

    திறன் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டு, திறன் தேர்வில் தேர்ச்சி பெற  ஓராண்டும், சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற இரண்டு ஆண்டுகளும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பதால்,  விதிகளை பின்பற்றி இப்பதவிகளுக்கு மீண்டும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளனர்.

    தேர்வு நடைமுறைகளில் ஏற்கனவே பணியில் உள்ளவர்களை மட்டும் பங்கேற்க அனுமதித்ததன் மூலம், பிற தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைமுறைகளில் பங்கேற்பதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் தவறான செய்தியை கொண்டு சேர்த்து விடும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

    பணியில் உள்ளவர்கள் தகுதி பெறவில்லை என்றால், நேரடி தேர்வு முறையை பின்பற்ற வேண்டும் என்ற விதியை மீறி, தேவையில்லாமல் விதிகளை தளர்த்தியுள்ளதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    Appointment Cancelled High Court Judges Judicial Assistants Recruitment
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!
    Next Article மோசடி வழக்கு; திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரனிடம் 4 மணி நேரம் விசாரணை – தன் மீது பொய்க் குற்றச்சாட்டு என பேட்டி
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.