Close Menu
    What's Hot

     திருப்பூர் : தேங்கிய 7 மூட்டை அரசு ஆவணங்கள், கடிதங்கள்..! டெலிவரி செய்யாத தபால்காரர் சஸ்பெண்ட்..!

    இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை 1.20கோடி பேர் பார்த்துள்ளனர்..! ஜாமின் மனு தள்ளுபடி..!

    ஜூலை 12ம் தேதி ‘We the leaders’-ன் முதல் மாநாடு..!! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»BREAKING: தவெக ஆட்சியை கவிழ்க்க சதி;  அதிமுக பிரமுகர் கைது -செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு வலைவீச்சு
    Featured

    BREAKING: தவெக ஆட்சியை கவிழ்க்க சதி;  அதிமுக பிரமுகர் கைது -செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு வலைவீச்சு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 2, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 Senthil balaji
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்தது தொடர்பான புகாரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியையும், அவரது சகோதரர் அசோக்குமாரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    மேலும் அதிமுக நிர்வாகியும் நாடார் பாதுகாப்பு பேரவைத் தலைவருமான சீனிவாசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை கவிழ்க்கும் நோக்கில் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய புகாரில் சென்னையை சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் பேரில், கரூரை சேர்ந்த கார்த்திக், ரமேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அளித்த தகவலில் மேலும் இருவர் என ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் பின்னணியில், திமுகவின் முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோரும் இருப்பது தெரியவந்துள்ளது.

    கைதான நரேஷ் என்பவர், அசோக்குமாரை சென்னையில் நேரடியாக சந்தித்துப் பேசியதாகவும், செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் கொடுத்த அறிவுரையின் அடிப்படையிலேயே எம்.எல்.ஏ. இளையராஜாவுடன் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

    இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் இந்த வழக்கில் மேலும் சில முக்கிய நபர்களை விசாரிக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பான புகாரின் பேரில் போலீசார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோரைத் தேடிவருகின்றனர்.

    இதனிடையே கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின் பேரில்,  ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக அதிமுகவை பிரமுகரும் நாடார் பாதுகாப்பு பேரவைத் தலைவருமான சீனிவாசன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    தவெக எம்எல்ஏ இளையராஜாவை மிரட்டியதாக கூறப்படும் IPDS திருநாவுக்கரசுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ள சீனிவாசன் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர் ஆவார்.

    இதன்மூலம் இந்த வழக்கில் 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு அரசியலுக்கு புதிதான ஆட்சிக் கவிழ்ப்பு சதி அம்பலமாகியுள்ளது அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    AIADMK arrest Ashok Kumar P Senthil Balaji TVK Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெங்கல்பட்டில் அதிகாலை பயங்கரம்..!! வெடித்து சிதறிய சிலிண்டர்..!! 4 பேர் படுகாயம்..!!
    Next Article வீட்டில் மூட்டை மூட்டையாக லெட்டர்கள் பதுக்கல்..!! போஸ்ட்மேன் அதிரடி பணியிடை நீக்கம்..!!
    Editor TN Talks

    Related Posts

     திருப்பூர் : தேங்கிய 7 மூட்டை அரசு ஆவணங்கள், கடிதங்கள்..! டெலிவரி செய்யாத தபால்காரர் சஸ்பெண்ட்..!

    July 2, 2026

    இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை 1.20கோடி பேர் பார்த்துள்ளனர்..! ஜாமின் மனு தள்ளுபடி..!

    July 2, 2026

    ஜூலை 12ம் தேதி ‘We the leaders’-ன் முதல் மாநாடு..!! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..!!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     திருப்பூர் : தேங்கிய 7 மூட்டை அரசு ஆவணங்கள், கடிதங்கள்..! டெலிவரி செய்யாத தபால்காரர் சஸ்பெண்ட்..!

    இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை 1.20கோடி பேர் பார்த்துள்ளனர்..! ஜாமின் மனு தள்ளுபடி..!

    ஜூலை 12ம் தேதி ‘We the leaders’-ன் முதல் மாநாடு..!! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..!!

    இனி தவெக தான்..! அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறும்..! சி.விஜயபாஸ்கர் பேச்சு..!

    அரசியல் அரங்கில் அதிரடி எழுச்சி..!! சரித்திரம் படைத்தார் CM விஜய்..!! எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகழாரம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.