Close Menu
    What's Hot

    “மாதம் ஒருமுறை மின் கட்டண வாக்குறுதி எங்கே?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

    இபிஎஸ் வழங்கிய கட்சி பதவியை நிராகரித்தது ஏன்? எஸ்.பி. வேலுமணி விளக்கம்

    தமிழகத்தில் தாமதமாகும் இடைத்தேர்தல்… காரணம் என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இனி தவெக தான்..! அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறும்..! சி.விஜயபாஸ்கர் பேச்சு..!
    Featured

    இனி தவெக தான்..! அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறும்..! சி.விஜயபாஸ்கர் பேச்சு..!

    Editor web4By Editor web4July 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக மற்றும் மற்ற கட்சிகளில் இருந்து பலர் வெளியேறி தவெகவில் இணைந்து வருகின்றனர். அவ்வாறு அதிமுகவில் அமைச்சர்களாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி இன்று அமைச்சர் என்.ஆனந்த் தலைமையில் தவெகவில் இணைந்தார்.

    தனது ஆதரவாளர்கள் 15,000 பேருடன் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தனியார் நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாக இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்,

    ”ஒரு தலைவன் சரியான முடிவெடுக்காமல் போனால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம்தான் இன்றைய அதிமுக. திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்கிறார்கள். தொண்டர்களின் மனநிலையைப் பற்றி கவலைப்படவில்லை. உண்மையை எடுத்துச் சொல்பவர்களை துரோகிகள் என்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    நாங்கள் உருவாக்கிய பொதுச்செயலாளரின் தவறான முடிவுகளால் அதிமுக தள்ளாடுகிறது. மாபெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்கியவர் முதல்-அமைச்சர் விஜய். விஜய் உருவாக்கியது ஒரு தலைமுறை மாற்றம். தமிழகத்தில் இல்லை, இந்தியாவில் அரசியல் புரட்சி ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். போல இனி தமிழகத்தில் விஜய் ஆட்சிதான் தொடரும்.

    நமது முதல்-அமைச்சர் இன்னும் ஓரிரு வாரங்களில் கரூர் வர இருக்கிறார். அந்த கரூர் நிகழ்ச்சியில் இன்னும் அலைகடலாக பல தொண்டர்களை அதில் இணைத்து, இந்த இயக்கம் தொடர்ந்து வெற்றி பெற உழைப்போம்” எனக் கூறினார்.

    தொடர்ந்து பேசிய சி.விஜயபாஸ்கர், ”தேர்தலுக்கு முன் தவெகவுடன் கூட்டணி வைக்க அதிமுக தலைமையிடம் வலியுறுத்தினோம். தேர்தலுக்குப் பின் ஆதரவு தர வலியுறுத்தினோம். ஆனால் தலைமை கேட்கவில்லை. எல்லா தேர்தல்களிலும் இனி தவெக வெற்றி பெறும். உறுதியான ஒற்றை தலைமையில் பயணித்து வெற்றி வாகை சூடுவோம், பயணிப்போம், உழைப்போம்.

    இங்கு பார்ப்பது வெறும் டிரெய்லர் தான். தலைமையின் ஆதரவோடு மெயின் பிக்சரை டெல்டா மாவட்டத்தில் காட்டுவோம். அங்கே மீண்டும் ஒரு பிரம்மாண்ட இணைப்பு விழா நடத்த தயாராக உள்ளோம்” என்று கூறினார்.

    c vijayabaskar cm vijay M.R. Vijayabaskar tamilnadu TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசியல் அரங்கில் அதிரடி எழுச்சி..!! சரித்திரம் படைத்தார் CM விஜய்..!! எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகழாரம்..!!
    Next Article ஜூலை 12ம் தேதி ‘We the leaders’-ன் முதல் மாநாடு..!! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..!!
    Editor web4

    Related Posts

    “மாதம் ஒருமுறை மின் கட்டண வாக்குறுதி எங்கே?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

    July 2, 2026

    இபிஎஸ் வழங்கிய கட்சி பதவியை நிராகரித்தது ஏன்? எஸ்.பி. வேலுமணி விளக்கம்

    July 2, 2026

    தமிழகத்தில் தாமதமாகும் இடைத்தேர்தல்… காரணம் என்ன?

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “மாதம் ஒருமுறை மின் கட்டண வாக்குறுதி எங்கே?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

    இபிஎஸ் வழங்கிய கட்சி பதவியை நிராகரித்தது ஏன்? எஸ்.பி. வேலுமணி விளக்கம்

    தமிழகத்தில் தாமதமாகும் இடைத்தேர்தல்… காரணம் என்ன?

     திருப்பூர் : தேங்கிய 7 மூட்டை அரசு ஆவணங்கள், கடிதங்கள்..! டெலிவரி செய்யாத தபால்காரர் சஸ்பெண்ட்..!

    இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை 1.20கோடி பேர் பார்த்துள்ளனர்..! ஜாமின் மனு தள்ளுபடி..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.