Close Menu
    What's Hot

    மோகன்லாலிடம் 10 யானைத் தந்தங்கள், 13 தந்தச் சிலைகள்

    விஜய் அரசை கவிழ்க்க திமுக சதி ; நாங்கள் காவல் அரணாக இருப்போம் – வைகோ

    ‘பாஸ் ஸ்கேம்’ மோசடி: ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ.38.5 லட்சம் பறிக்க முயற்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சாதி ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் –  அமைச்சர் வன்னியரசு உறுதி
    Featured

    சாதி ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் –  அமைச்சர் வன்னியரசு உறுதி

    Editor TN TalksBy Editor TN TalksJuly 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 vanni
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆணவ கொலைக்கு தனிச் சட்டம் வேண்டும் என பேரவையின் முதல் நாளிலேயே பேசி இருக்கின்றோம். இந்த முறை பேரவை கூடும்போது இது குறித்து நிச்சயம் வலியுறுத்துவேன் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

    இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் , சமூகச் சீர்திருத்தவாதியுமான பாபு ஜெகஜீவன் ராமின் 40ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை எழிலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் , “இந்தியா முழுவதும் பாபுஜி (ஜெகஜீவன் ராம்) அவர்களின் நினைவைப் போற்றுகின்ற வகையில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று வீரவணக்கம் செலுத்தி வருகிறோம்.

    1971-ல் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரின் போது நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்து, இந்தியாவின் வலிமையை உலகிற்குப் பறைசாற்றியவர் அவர். இன்று இந்தியா பல்வேறு துறைகளில் வெற்றிகளை ஈட்டியிருக்கிறது என்றால், அன்றைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த பாபுஜியின் துணிச்சல் மிக்க உத்திகளே அதற்குக் காரணம்” என்றார்.

    ​மேலும், நாடாளுமன்றத்திலும், துணைப் பிரதமராக இருந்தபோதும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய அவர் மேற்கொண்ட கட்டமைப்புகளே இன்றும் அம்மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து வருவதாகவும், தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அவரது புகழையும் போராட்ட வரலாற்றையும் முன்னெடுப்போம் என தெரிவித்தார்.

    அண்மையில் காதல்ஜோடிகளுக்கு ஏற்பட்ட மரணம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “தற்போது இது தொடர்பாகக் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் முறையான ஆதாரங்களின் அடிப்படையில் அரசு சார்பில் முழுமையாக வெளிப்படுத்தப்படும். ஒருவேளை இது சாதி ஆணவப் படுகொலை என்று தெரியவந்தால், நிச்சயமாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.​

    மேலும், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக அரசப் பொறுத்தவரையில், சாதி ஆணவப் படுகொலைகளை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்துவதற்கு ஒரு ‘தனிச்சட்டம்’ இயற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் உறுதியான நிலைப்பாடு. இதற்காக நான் சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலேயே எனது முதல் உரையிலேயே வலியுறுத்திப் பேசியிருந்தேன். தற்போது நடைபெற்று வரும் இந்தச் சட்டமன்றத் தொடரிலும் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிறச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துவேன். இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு நல்லதொரு முடிவு எட்டப்படும்” என்றார்.

    Anti Honour Killing Law honour killing Minister Vanniyarasu Vanniyarasu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுவுடனான நட்பை நான் சிதைக்கவில்லை;  தவெக ஆட்சி 5 ஆண்டு நீடிக்கும் – திருமாவளவன்
    Next Article வெனிசுலாவை புரட்டிப்போட்ட இரட்டை நிலநடுக்கம்!. பலி எண்ணிக்கை 3,300 ஆக உயர்வு!. 50,000 பேர் மாயம்!
    Editor TN Talks

    Related Posts

    மோகன்லாலிடம் 10 யானைத் தந்தங்கள், 13 தந்தச் சிலைகள்

    July 6, 2026

    விஜய் அரசை கவிழ்க்க திமுக சதி ; நாங்கள் காவல் அரணாக இருப்போம் – வைகோ

    July 6, 2026

    ‘பாஸ் ஸ்கேம்’ மோசடி: ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ.38.5 லட்சம் பறிக்க முயற்சி!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மோகன்லாலிடம் 10 யானைத் தந்தங்கள், 13 தந்தச் சிலைகள்

    விஜய் அரசை கவிழ்க்க திமுக சதி ; நாங்கள் காவல் அரணாக இருப்போம் – வைகோ

    ‘பாஸ் ஸ்கேம்’ மோசடி: ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ.38.5 லட்சம் பறிக்க முயற்சி!

    “கவர்ச்சி மாயையை நம்பி வாக்களித்த மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்”

    நேரில் தவெக அரசுக்கு பாராட்டு; அறிக்கையில் திட்டு- அன்புமணியின் புதிர் அரசியல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.