Close Menu
    What's Hot

    மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம்

    அயோத்தி ராமர் கோயிலில் நாள்தோறும் ரூ.8லட்சம் நன்கொடை திருட்டு..! வெளியான அதிர்ச்சி தகவல்..!

    மேற்கு வங்கத்தில் சூப்பர் எமெர்ஜென்சி ; திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திமுவுடனான நட்பை நான் சிதைக்கவில்லை;  தவெக ஆட்சி 5 ஆண்டு நீடிக்கும் – திருமாவளவன்
    Featured

    திமுவுடனான நட்பை நான் சிதைக்கவில்லை;  தவெக ஆட்சி 5 ஆண்டு நீடிக்கும் – திருமாவளவன்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 vck
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக கூட்டணியில் விசிக இல்லை என திமுகதான் அறிவித்ததாகவும், தவெக கூட்டணியில் விசிக இருப்பதாக தான் அறிவிக்கவில்லை எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது விழா சென்னையில் நேற்று இரவு நடைபெற்றது. அந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது..

    யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வையுங்கள்; ஆனால் எங்களுக்கு ஒரு பதவி வேண்டும் என்று  கேட்பவர்கள்தான் விசிகவில் இருக்கிறார்கள்.

    ஏன் அவர்களுடன் கூட்டணி வைக்கிறீர்கள் என்றுகேள்வி கேட்கும் இளைஞர்கள் வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் உள்ளவர்களையே சமாதானப்படுத்த முடியாதபோது ஒரு இயக்கத்தையே தாக்குப்பிடித்து நடத்துவது என்பது சாதாரண விஷயமல்ல.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தனிப்பட்ட முறையில் நான் எந்த முடிவும் எடுப்பதில்லை. கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடிதான் முடிவு எடுக்கப்படுகிறது.

    திமுக – அதிமுக கூட்டணி அமைவதைத் தடுத்ததில் முக்கியப் பங்கு வகித்தது நான் தான். ஆனால் சமூக வலைத்தளங்களில் வேறு விதமாக விமர்சிக்கிறார்கள்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த வகையிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பலவீனப்பட ஒரு போதும் இடம் தந்ததில்லை.

    002 vck A

    திமுக கூட்டணியில் நான் இருந்தபோது இப்போதைய முதலமைச்சர் அம்பேத்கரின் நூலை வெளியிட்டபோது, நான் எங்கு இருந்தாலும் எனது உள்ளம்  திமுக கூட்டணியில்தான் இருக்கும் என்றார்.

    எனக்கு எத்தனையோ கூட்டணி அழைப்புகள் வந்தபோதும் மதச்சார்பற்ற கூட்டணியில் இருந்து விலகவில்லை.

    தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் முன்பே திமுக, தலைமைக்குத் தகவல் கொடுத்தேன்.

    அமைச்சரவையில் நான் தான் சேரவேண்டும் என ரவிக்குமார் போன்றோ சொன்னபோதும் 30 ஆண்டு காலம் உழைத்த தம்பி வன்னியரசுவை அமைச்சராக்கினேன்.

    அப்போது முதலமைச்சரை சந்தித்து பேசியபோது, தேர்தலுக்கு முன்பாக தவெக மீது இருந்த ஐயங்களைக் கூறிவிட்டு, தற்போது ஆட்சி அமைப்பதற்கு மதச்சார்பற்ற  சக்திகளை அவர் அழைத்திருப்பது துணிச்சலான முடிவு என்று பாராட்டினேன்.

    5 ஆண்டு காலம் தவெக ஆட்சி நடக்கும். அதற்கு விசிக எப்போதும்  உறுதுணையாக இருக்கும்.

    திமுகதான்  கூட்டணியில் விசிக இல்லை எனக் கூறி எங்களுடன் உறவில்லை என்று அறிவித்ததே தவிர, நான் அந்த நட்பை ஒருபோதும் சிதைக்கவில்லை.

    தவெக கூட்டணியில் இருப்பதாகவும் நான் இதுவரை அறிவிக்கவில்லை.

    அரசியல் வேறு, தனிநபர் நட்பு வேறு. தமிழிசை, பொன்னார், அண்ணாமலை, அன்புமணி என யாராக இருந்தாலும் மரியாதை கொடுப்பது எனது பண்பு. டெல்லி அரசியலைப் போல தமிழகத்திலும் அரசியல் நாகரிகத்தை முன்னெடுத்தவன் நான்“.

    DMK DMK Alliance thirumavalavan Thol Thirumavalavan TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாட்டு வண்டியில் ஊர்வலம் சென்ற ஐடி தம்பதி!. கோவையில் நெகிழ்ச்சி!
    Next Article சாதி ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் –  அமைச்சர் வன்னியரசு உறுதி
    Editor TN Talks

    Related Posts

    மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம்

    July 6, 2026

    அயோத்தி ராமர் கோயிலில் நாள்தோறும் ரூ.8லட்சம் நன்கொடை திருட்டு..! வெளியான அதிர்ச்சி தகவல்..!

    July 6, 2026

    மேற்கு வங்கத்தில் சூப்பர் எமெர்ஜென்சி ; திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம்

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம்

    அயோத்தி ராமர் கோயிலில் நாள்தோறும் ரூ.8லட்சம் நன்கொடை திருட்டு..! வெளியான அதிர்ச்சி தகவல்..!

    மேற்கு வங்கத்தில் சூப்பர் எமெர்ஜென்சி ; திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம்

    மெக்ஸிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து!. பட்டாசு சதிக்கு மைதானத்தில் பதிலடி!

    லோக் ஆயுக்தா சட்டம்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.