Close Menu
    What's Hot

    தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்

    முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பதிவு – திமுகவினர் 2 பேர் கைது!

    சொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கடலூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்..! முதலமைச்சர் விஜய் உத்தரவு..!
    Featured

    கடலூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்..! முதலமைச்சர் விஜய் உத்தரவு..!

    editor5By editor5July 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 07 07 at 1.41.24 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பணிக்கன் குப்பம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் விஜய் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    “ கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பம் கிராமம் அருகே கும்பகோணம் சாலையில் கடந்த 5.7.2026 அன்று காலை பண்ருட்டி வட்டம் மருங்கூர் கிராமத்திலிருந்து பண்ருட்டி நோக்கி முந்திரிக் கட்டைகளை ஏற்றி வந்த டிராக்டரை, பின்னால் தொடர்ந்து வந்த டாடா ஏஸ் வாகனம் பின்புறமாக மோதிய விபத்தில் டாடா ஏஸ் வாகனத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த குறிஞ்சிப்பாடி வட்டம், வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் மனைவி சத்யா (வயது 31), சாமிநாதன் மனைவி செல்வராணி(58) மற்றும் கீழுர் மதுரா, ஆயிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கோதண்டபாணி மனைவி காந்திமதி(60), ராசாக்கண்ணு மகன் ரவிச்சந்திரன்(58) ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையுமடைந்தேன்.

    இந்த விபத்தில், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உக்கரவேல் (வயது 48), சந்தோஷ்(37), தேவகி(50), அஞ்சலை(60), சதீஷ்(35), விஜயா(35), சந்திரகுமார்(35) ஆகிய 7 நபர்களுக்கும் மற்றும் லேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்மாவாசை(50) என்பவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கு 50 ஆயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

    accident cm vijay cuddalore
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசேலம்; திமுக மாவட்ட பிரதிநிதி வெட்டிப் படுகொலை – நிலப்பிரச்சனை காரணமா? காவல்துறை விசாரணை தீவிரம்
    Next Article AI மிகவும் ஆபத்தானது..! தந்தையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ருதிஹாசன்..!
    editor5

    Related Posts

    தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்

    July 7, 2026

    முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பதிவு – திமுகவினர் 2 பேர் கைது!

    July 7, 2026

    சொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்

    முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பதிவு – திமுகவினர் 2 பேர் கைது!

    சொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!

    மீனாட்சி அம்மன் கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் யார் யார்? – அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

    வயநாடு அருகே நிலச்சரிவு – மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.