தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல். ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதேபோன்று முதல்வர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதால், மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிக்கான பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், இத்தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த வேட்பாளர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் வழக்குகள் தொடரப்பட்டு அவை தற்போதும் நிலுவையில் உள்ளன. இதனைச் சுட்டிக்காட்டியே நீதிமன்றம் இந்தத் தடையை விதித்துள்ளது.
பொதுவாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ஒரு தொகுதி காலியான 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி இருந்தாலும், முந்தைய பொதுத்தேர்தல் முடிவுகளை எதிர்த்த சட்டப்பூர்வ வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது, அங்கு புதிய தேர்தலை அறிவிப்பது சட்டச் சிக்கல்களை உருவாக்கும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், குறிப்பிட்ட 5 தொகுதிகளின் தேர்தல் வழக்குகளின் இறுதித் தீர்ப்பு வரும் வரை அங்கு இடைத்தேர்தல் தேதிகளை அறிவிக்கக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.
