கோவை தெற்கில் செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் அவரது வெற்றி செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, தவெக வேட்பாளர் செந்தில்குமாரை விட 2,271 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து, ஈரோட்டைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 81-ன் படி, சம்பந்தப்பட்ட தொகுதியின் வேட்பாளராகவோ அல்லது வாக்காளராகவோ இல்லாத ஒருவர், அந்தத் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்று சுட்டிக்காட்டினார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மனுதாரர் பிரகாசம், கோவை தெற்கு தொகுதியுடன் எந்தத் தொடர்பிலும் இல்லை என்பதைக் குறிப்பிட்ட நீதிபதி, தேவையற்ற வழக்குகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்த மனுவைத் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்தார். ஒரு தொகுதியின் தேர்தலை யார் வேண்டுமானாலும் எதிர்க்கலாம் என்று அனுமதித்தால், ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் வழக்குகள் குவியும் அபாயம் உள்ளது என்றும் நீதிபதி தனது உத்தரவில் எச்சரித்துள்ளார்.
