Close Menu
    What's Hot

    ‘தி ஒடிஸி’ பிரீமியர் விழா! மும்பை வந்த கிறிஸ்டோபர் நோலன்!

    2 குழந்தைகளுடன் தந்தை தற்கொலை!. உடலில் மின்சாரத்தை செலுத்தி விபரீத முடிவு!.

    “தமிழகத்திற்குப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது” – மீண்டும் திட்டவட்டமாகக் கூறிய கர்நாடகா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»‘தி ஒடிஸி’ பிரீமியர் விழா! மும்பை வந்த கிறிஸ்டோபர் நோலன்!
    சினிமா

    ‘தி ஒடிஸி’ பிரீமியர் விழா! மும்பை வந்த கிறிஸ்டோபர் நோலன்!

    Editor web1By Editor web1July 10, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் ‘ஸ்பைடர்மேன்’ நடிகர் டாம் ஹாலண்ட் ஆகியோர் தங்களது அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘தி ஒடிஸி’ திரைப்படத்தின் இந்திய பிரீமியர் காட்சிக்காக இன்று (ஜூலை 10) மும்பை வந்தடைந்தனர்.

    கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய திரைப்படம் ஒன்றுக்கு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகப் சிறப்புக் காட்சி விழா நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.  யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தத் திரைப்படத்தின் உலகளாவிய விளம்பரப் பயணத்தில் லண்டன், பாரிஸ் மற்றும் நியூயார்க் நகரங்களுடன் சேர்த்து இந்தியத் தலைநகரான மும்பையையும் ஒரு முக்கிய மையமாகத் தேர்ந்தெடுத்துள்ளது.

    இதற்காகத் தனது தயாரிப்பாளரும் மனைவியுமான எம்மா தாமஸ், படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மேட் டாமன் மற்றும் டாம் ஹாலண்ட் ஆகியோருடன் நோலன் மும்பை வந்துள்ளார். அவர்கள் அனைவரும் மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தாஜ் மஹால் பேலஸ்’ ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

    மும்பையில் நடைபெற்ற ஊடகங்களுக்கான பிரத்யேகக் காட்சிக்குப் பிறகு ரசிகர்களைச் சந்தித்த நடிகர் டாம் ஹாலண்ட், திரையரங்கில் இந்திய ரசிகர்கள் எழுப்பிய உற்சாக ஒலியைக் கண்டு நெகிழ்ந்தார். தங்களை இவ்வளவு அன்போடும், மகிழ்ச்சியோடும் வரவேற்ற இந்திய மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். உலகிலேயே இந்திய ரசிகர்களைப் போலத் திரையரங்குகளில் யாரும் இவ்வளவு எனர்ஜியைக் கொண்டு வருவதில்லை என்று தெரிவித்த ஹாலண்ட், கிறிஸ்டோபர் நோலனின் இந்த அற்புதம் நிச்சயம் பிடிக்கும் என்றார்.  உலகிலேயே சினிமா குறித்து அதிகம் தெரிந்த, சினிமாவைத் தீவிரமாகக் காதலிக்கும் ரசிகர்கள் இந்திய ரசிகர்கள் தான் எனப் நோலன் பாராட்டினார்.

    ஹாலிவுட் வரலாற்றிலேயே முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராக்கள் மூலம் மட்டுமே எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை ‘தி ஒடிஸி’ பெற்றுள்ளது. ஹோமரின் புகழ்பெற்ற கிரேக்கக் காவியமான ‘ஒடிஸியஸ்’ கதையை மையமாகக் கொண்டு, ட்ராய் போருக்குப் பின் ஒடிஸியஸ் தனது தாயகம் திரும்ப மேற்கொள்ளும் 10 ஆண்டுக்காலப் போராட்டப் பயணத்தை நோலன் பாணியில் ஆக்ஷன் டிராமாவாக மாற்றியுள்ளனர்.

    ஜூலை 17-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இத்திரைப்படத்திற்கு இந்தியாவில் இப்போதே முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2 குழந்தைகளுடன் தந்தை தற்கொலை!. உடலில் மின்சாரத்தை செலுத்தி விபரீத முடிவு!.
    Editor web1
    • Website

    Related Posts

    இரா. செழியன்: எதார்த்த சினிமாவின் தனித்துவ அடையாளம்!

    July 10, 2026

    தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா.செழியன் காலமானார்..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!

    July 10, 2026

    ‘ஜன நாயகன்’ படத்திற்கு A சான்றிதழ்!. தணிக்கை வாரியம் அனுமதி!

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘தி ஒடிஸி’ பிரீமியர் விழா! மும்பை வந்த கிறிஸ்டோபர் நோலன்!

    2 குழந்தைகளுடன் தந்தை தற்கொலை!. உடலில் மின்சாரத்தை செலுத்தி விபரீத முடிவு!.

    “தமிழகத்திற்குப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது” – மீண்டும் திட்டவட்டமாகக் கூறிய கர்நாடகா!

    40 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்றுப் பயணம்: நியூசிலாந்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

    அரசுப் பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரலை!- பள்ளித் தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.