Close Menu
    What's Hot

    இந்தியா-நியூசிலாந்து இருதரப்பு வர்த்தகம் 2030-க்குள் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடி நம்பிக்கை!

    கே.பாக்யராஜ் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் களமிறங்கும் பேரரசு!

    வியட்நாம் படகு விபத்து; தமிழ்நாடு அரசு  உதவி எண்கள் அறிவிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கல்வி நிறுவனங்களில் அரசியல் பிரசாரம் – தவெகவுக்கு எதிராக அதிமுக வழக்கு!
    Featured

    கல்வி நிறுவனங்களில் அரசியல் பிரசாரம் – தவெகவுக்கு எதிராக அதிமுக வழக்கு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    015 admk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கல்வி நிறுவனங்களை, அரசியல் பிரசாரத்துக்காக தவறாக பயன்படுத்தி, மாணவர்களை அரசியல் ரீதியாக சுரண்டும்  த.வெ.க.வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, அ.தி.மு.க. நிர்வாகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அ.தி.மு.க.,வின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி வளாகங்களில், த.வெ.க. நிர்வாகிகள் நுழைந்து, தங்கள் கட்சி தலைவர்களை முன்னிலைப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாகவும்,  தலைவருக்கு ஆதரவாக, விஜய் அண்ணா, விஜய் மாமா என, மாணவர்களை வாழ்த்து கோஷங்கள் எழுப்பச் செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    தேசிய தலைவர்கள் புகைப்படங்களுடன், த.வெ.க. தலைவர் படத்தையும் காட்சிப்படுத்துவதாகவும்,

    கல்வி நிறுவனங்களில் சினிமா பாடல்கள் பாடப்படுகின்றன என, சமூக ஊடகங்கள், ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கல்வி நிறுவனங்களில், அரசியல் பிரசாரத்துக்காக தவறாகப் பயன்படுத்தி, மாணவர்களை அரசியல் ரீதியாக சுரண்டும் த.வெ.க.வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கும், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும் புகார் அனுப்பி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    அரசியல் சாசன விதிகளையும், கல்வி உரிமை சட்ட விதிகளையும் மீறி செயல்படுவது குறித்து, உடனே விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்  எனவும், இந்நிகழ்வுகளை அனுமதிக்கும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவன அதிகாரிகளுக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கல்வி நிறுவனங்களில், அரசியல் பிரசாரங்களை தடை செய்து, விதிமுறைகளை வகுக்க வேண்டும் என, மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

     த.வெ.க.,வின் இந்த செயல்பாடுகள், பள்ளி, கல்லுாரிகளில் கல்வி பயிலும் சூழலை இடையூறாக உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில், திங்கள் கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

    AIADMK court case Educational Institutions Political Campaign TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“1,000 நில அளவையர்கள் நியமனம்… தனி பட்டா வாரியம்!” – அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!  
    Next Article வியட்நாமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து; தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட15 பேர் உயிரிழப்பு
    Editor TN Talks

    Related Posts

    இந்தியா-நியூசிலாந்து இருதரப்பு வர்த்தகம் 2030-க்குள் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடி நம்பிக்கை!

    July 11, 2026

    வியட்நாம் படகு விபத்து; தமிழ்நாடு அரசு  உதவி எண்கள் அறிவிப்பு

    July 11, 2026

    தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் உயர்வு: தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா-நியூசிலாந்து இருதரப்பு வர்த்தகம் 2030-க்குள் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடி நம்பிக்கை!

    கே.பாக்யராஜ் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் களமிறங்கும் பேரரசு!

    வியட்நாம் படகு விபத்து; தமிழ்நாடு அரசு  உதவி எண்கள் அறிவிப்பு

    தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் உயர்வு: தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!

    பழனி கோயிலின் ரூ.100 கோடி சொத்து பத்திரப்பதிவு ரத்து? அதிகாரிகள் மீது விசாரணை தீவிரம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.