Close Menu
    What's Hot

    நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு உற்சவம்!

    ஏவுகணைத் தயாரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு? அஸ்ட்ரா மார்க் 2, பிரளய் திட்டங்கள் ஒப்படைப்பு?

    தமிழகத்தில் மீண்டும் வெயிலின் கோரத்தாண்டவம்: 12 இடங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»நெல்லை டவுன் அருகே பயங்கரம்: இளைஞர் வெட்டிப் படுகொலை– உறவினர்கள் போராட்டம்!
    தமிழ்நாடு

    நெல்லை டவுன் அருகே பயங்கரம்: இளைஞர் வெட்டிப் படுகொலை– உறவினர்கள் போராட்டம்!

    Editor web1By Editor web1July 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 12 17h43m45s487
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நெல்லை டவுன் அருகே இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை டவுன் பாறையடி மந்திரமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் ஆவுடையப்பன் (38). பிளம்பராக வேலை பார்த்து வந்த இவருக்குத் திருமணமாகி, மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். சங்கரன்கோவில் – நெல்லை டவுன் மெயின் ரோடு பகுதியில் உள்ள கோட்டையடி சுடுகாடு அருகே ஆவுடையப்பன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென ஆவுடையப்பனை வழிமறித்து, சரமாரியாக வெட்டினர். இதில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இக்கொலை குறித்துத் தகவல் அறிந்த நெல்லை டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால், அதற்குள் அங்கு திரண்ட ஆவுடையப்பனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், போலீசாரை உடலை எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.

    “கொலையாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்யும் வரை உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம்” என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    vlcsnap 2026 07 12 17h43m11s687

    இதனைத் தொடர்ந்து, நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் அன்சூர் நாகர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட இறந்தவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.

    உயரதிகாரியின் இந்த உறுதிமொழிக்குப் பிறகு, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதையடுத்து, ஆவுடையப்பனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப் பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. முன்பகை காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் நெல்லை டவுன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: 11 இந்தியர்களில் 10 பேர் மீட்பு; ஒருவர் மாயம் – இந்தியா கடும் கண்டனம்
    Next Article அக்னியை அணைத்த தேகம் ; காற்றில்  கலந்தது கீதம் – விடைபெற்றார் பாடகி எஸ். ஜானகி
    Editor web1
    • Website

    Related Posts

    நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு உற்சவம்!

    July 12, 2026

    தமிழகத்தில் மீண்டும் வெயிலின் கோரத்தாண்டவம்: 12 இடங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதம்!

    July 12, 2026

    கோவை வேளாண் கல்லூரி மாணவி மர்ம மரணம்: நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு உற்சவம்!

    ஏவுகணைத் தயாரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு? அஸ்ட்ரா மார்க் 2, பிரளய் திட்டங்கள் ஒப்படைப்பு?

    தமிழகத்தில் மீண்டும் வெயிலின் கோரத்தாண்டவம்: 12 இடங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதம்!

    கோவை வேளாண் கல்லூரி மாணவி மர்ம மரணம்: நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!

    அக்னியை அணைத்த தேகம் ; காற்றில்  கலந்தது கீதம் – விடைபெற்றார் பாடகி எஸ். ஜானகி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.