Close Menu
    What's Hot

    “தவெக ஆட்சி முடியும்போது ரூ.15 லட்சம் கோடி கடன் இருக்கும்”: அண்ணாமலை கருத்து!

    “2031-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்”– ‘வீ தி லீடர்ஸ்’ மாநாட்டில் அண்ணாமலை அதிரடி முழக்கம்!

    “போதையில்லா தமிழகம்!” – அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ முதல் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»ஆன்மீகம்»நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு உற்சவம்!
    ஆன்மீகம்

    நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு உற்சவம்!

    Editor web1By Editor web1July 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 12 19h26m18s309
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

    நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்பாள் வளைகாப்பு உற்சவம் 4-ம் திருநாளான இன்று (ஜூலை 12) நடைபெற்றது.

    vlcsnap 2026 07 12 19h26m47s709

    விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, காந்திமதி அம்பாளுக்குப் பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்பட்டன. வெண்பட்டு உடுத்தி அம்பாள் சன்னதி மகா மண்டபத்தில் எழுந்தருளிய காந்திமதி அம்பாளை, மங்கள வாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க, பல்வேறு வகையான சீர்வரிசை தட்டுகளுடன் சுவாமி சன்னதிக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அங்கு சுவாமி சன்னதியில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

    அதன் பின், ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளிய காந்திமதி அம்பாளுக்குச் சந்தனம், ஜவ்வாது, சந்தனாதி தைலம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு ‘நலுங்கு வைக்கும்’ வைபவம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

    நலுங்கு நிகழ்ச்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, காந்திமதி அம்பாளுக்குப் புதிய வஸ்திரங்கள் சாத்தப்பட்டு, கைகளில் பல வண்ண வளையல்கள் அணிவிக்கப்பட்டு வளைகாப்பு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் அம்பாளுக்குப் பிரம்மாண்ட மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது

    vlcsnap 2026 07 12 19h26m30s824.இந்தக் காட்சியைக் காண்பதற்கும், அம்பாளின் அருளைப் பெறுவதற்கும் நெல்லை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். வளைகாப்பு முடிந்ததும் பக்தர்களுக்கு வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஏவுகணைத் தயாரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு? அஸ்ட்ரா மார்க் 2, பிரளய் திட்டங்கள் ஒப்படைப்பு?
    Next Article “போதையில்லா தமிழகம்!” – அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ முதல் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்!
    Editor web1
    • Website

    Related Posts

    “தவெக ஆட்சி முடியும்போது ரூ.15 லட்சம் கோடி கடன் இருக்கும்”: அண்ணாமலை கருத்து!

    July 12, 2026

    “2031-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்”– ‘வீ தி லீடர்ஸ்’ மாநாட்டில் அண்ணாமலை அதிரடி முழக்கம்!

    July 12, 2026

    “போதையில்லா தமிழகம்!” – அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ முதல் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்!

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தவெக ஆட்சி முடியும்போது ரூ.15 லட்சம் கோடி கடன் இருக்கும்”: அண்ணாமலை கருத்து!

    “2031-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்”– ‘வீ தி லீடர்ஸ்’ மாநாட்டில் அண்ணாமலை அதிரடி முழக்கம்!

    “போதையில்லா தமிழகம்!” – அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ முதல் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்!

    நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு உற்சவம்!

    ஏவுகணைத் தயாரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு? அஸ்ட்ரா மார்க் 2, பிரளய் திட்டங்கள் ஒப்படைப்பு?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.