Close Menu
    What's Hot

    “போதையில்லா தமிழகம்!” – அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ முதல் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்!

    நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு உற்சவம்!

    ஏவுகணைத் தயாரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு? அஸ்ட்ரா மார்க் 2, பிரளய் திட்டங்கள் ஒப்படைப்பு?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவை வேளாண் கல்லூரி மாணவி மர்ம மரணம்: நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!
    தமிழ்நாடு

    கோவை வேளாண் கல்லூரி மாணவி மர்ம மரணம்: நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!

    Editor web1By Editor web1July 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 12 18h01m48s361
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை வேளாண் கல்லூரியில் படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்கக் கோரி, விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டில் மாணவியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கோவை வேளாண் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் மாணவி தரணிகா. இவர் சமீபத்தில் கல்லூரி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

    மாணவி தரணிகாவின் மரணத்திற்குப் பின்னால் உள்ள உண்மை கண்டறியப்பட வேண்டும், உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, விக்கிரவாண்டில் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திடீரென சாலையில் திரண்டனர். அங்குள்ள முக்கியச் சாலையில் அமர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே அணிவகுத்து நின்றன.

    vlcsnap 2026 07 12 18h02m45s015

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விக்கிரவாண்டி காவல்துறையினர், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். “மாணவியின் மரணம் குறித்து உரிய அதிகாரிகளிடம் பேசி முறையான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போலீசார் உறுதியளித்தனர்.

    போலீசாரின் சமாதானத்தை ஏற்றுக்கொண்ட உறவினர்கள், மறியல் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். எனினும், இந்தத் சாலை மறியல் காரணமாக விழுப்புரம் – சென்னை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கடுமையான போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு ஸ்தம்பித்து நின்றதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅக்னியை அணைத்த தேகம் ; காற்றில்  கலந்தது கீதம் – விடைபெற்றார் பாடகி எஸ். ஜானகி
    Next Article தமிழகத்தில் மீண்டும் வெயிலின் கோரத்தாண்டவம்: 12 இடங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதம்!
    Editor web1
    • Website

    Related Posts

    “போதையில்லா தமிழகம்!” – அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ முதல் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்!

    July 12, 2026

    நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு உற்சவம்!

    July 12, 2026

    தமிழகத்தில் மீண்டும் வெயிலின் கோரத்தாண்டவம்: 12 இடங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதம்!

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “போதையில்லா தமிழகம்!” – அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ முதல் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்!

    நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு உற்சவம்!

    ஏவுகணைத் தயாரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு? அஸ்ட்ரா மார்க் 2, பிரளய் திட்டங்கள் ஒப்படைப்பு?

    தமிழகத்தில் மீண்டும் வெயிலின் கோரத்தாண்டவம்: 12 இடங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதம்!

    கோவை வேளாண் கல்லூரி மாணவி மர்ம மரணம்: நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.