Close Menu
    What's Hot

    சென்னை : லண்டன் விமானத்தில் மோதிய பறவை..! விமானியின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்..!

    சொத்துக்குவிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    மோடி முன்பு சாந்தூர் வாசித்த ஜப்பான் பிரதமர்; இசைக்கருவியின் பாரம்பரியத்தை விளக்கிய இந்திய தூதரகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பொன்னேரி அருகே பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: கரும்புகையுடன் எரிந்த தீயால் பரபரப்பு!
    தமிழ்நாடு

    பொன்னேரி அருகே பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: கரும்புகையுடன் எரிந்த தீயால் பரபரப்பு!

    Editor web1By Editor web1July 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 13 09h38m36s992
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பழைய பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    பொன்னேரியை அடுத்த தத்தைமஞ்சி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பழைய பிளாஸ்டிக் சேகரிப்புக் கிடங்கில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கில் இருந்தவை எளிதில் தீப்பற்றக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் தீ மளமளவெனப் பரவி, வானுயரக் கரும்புகையுடன் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

    vlcsnap 2026 07 13 09h38m46s736 1

    தீ விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் பொன்னேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்றின் வேகம் காரணமாகப் பிளாஸ்டிக் பொருட்கள் கட்டுக்கடங்காமல் எரிந்ததால், தண்ணீருடன் ரசாயனக் கலவையையும் சேர்த்துப் பீய்ச்சி அடித்துத் தீயைக் கட்டுப்படுத்தினர்.

    பிளாஸ்டிக் பொருட்கள் பெருமளவில் எரிந்து சாம்பலாகி வருவதால், அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்தது. இதனால் ஏற்பட்ட கடுமையான துர்நாற்றம் காரணமாக, சுற்றியுள்ள கிராம மக்களுக்குச் சுவாசக் கோளாறு உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டது.

    இந்த விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது இதற்குப் பின்னணியில் ஏதேனும் சதி வேலைகள் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறை நாள் என்பதால் ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎழுத்தாளர் பூமணி மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்! அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!
    Next Article புதுப்பொலிவுடன் வெளியாகும் ஐ.ஆர்.சி.டி.சி..! விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிப்பு..!
    Editor web1
    • Website

    Related Posts

    சென்னை : லண்டன் விமானத்தில் மோதிய பறவை..! விமானியின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்..!

    July 13, 2026

    சொத்துக்குவிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    July 13, 2026

    தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது: சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீடு தொடக்கம்!

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை : லண்டன் விமானத்தில் மோதிய பறவை..! விமானியின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்..!

    சொத்துக்குவிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    மோடி முன்பு சாந்தூர் வாசித்த ஜப்பான் பிரதமர்; இசைக்கருவியின் பாரம்பரியத்தை விளக்கிய இந்திய தூதரகம்

    தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது: சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீடு தொடக்கம்!

    லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வீராங்கனையின் சாதனை..! வரலாற்றில் இடம் பிடித்து அசத்தல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.