Close Menu
    What's Hot

    சென்னை : லண்டன் விமானத்தில் மோதிய பறவை..! விமானியின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்..!

    சொத்துக்குவிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    மோடி முன்பு சாந்தூர் வாசித்த ஜப்பான் பிரதமர்; இசைக்கருவியின் பாரம்பரியத்தை விளக்கிய இந்திய தூதரகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கிருஷ்ணகிரியில் பயங்கரம்: FASTag பணம் கேட்ட டோல்கேட் ஊழியர் மீது 30 பேர் கொண்ட கும்பல் சரமாரி தாக்குதல்! 5 பேர் கைது!
    Featured

    கிருஷ்ணகிரியில் பயங்கரம்: FASTag பணம் கேட்ட டோல்கேட் ஊழியர் மீது 30 பேர் கொண்ட கும்பல் சரமாரி தாக்குதல்! 5 பேர் கைது!

    Editor web1By Editor web1July 13, 2026Updated:July 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 13 10h10m59s218
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிருஷ்ணகிரி அருகே உள்ள சுங்கச்சாவடியில் FASTag கட்டணம் கேட்ட ஊழியரை, 30 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கிருஷ்ணகிரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பட்டி பகுதியில் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. அவ்வழியாக பிக்கப் வேன் ஒன்று சென்றுள்ளது. அந்த வாகனத்தில் ‘பாஸ்ட்டேக்’ கணக்கில் போதிய பணம் இல்லாததால், அங்கிருந்த ஊழியர் வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்தக் கோரியுள்ளார். இதனால் ஊழியருக்கும் வேன் ஓட்டுநருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த ஓட்டுநர் அங்கிருந்து வாக்குவாதத்துடன் கிளம்பிச் சென்றுள்ளார்.

    சம்பவம் நடந்து சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, அந்த ஓட்டுநர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 30-க்கும் மேற்பட்டோரைத் திரட்டிக்கொண்டு மீண்டும் சுங்கச்சாவடிக்கு வந்துள்ளார். கும்பலாகச் சுங்கச்சாவடிக்குள் புகுந்த அவர்கள், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.

    vlcsnap 2026 07 13 10h10m13s670

    வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதே ஊழியரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து, தாக்கியுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்தக் கும்பலிடம் இருந்து ஊழியரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சுங்கச்சாவடியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இந்த வன்முறைச் சம்பவத்தில் 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைப் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஏகாம்பரநாதர் கோயிலில் புதிய தங்கத் தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்துத் இழுத்து துவக்கி வைத்தனர்!
    Next Article இயக்குநர் பாக்யராஜ் மறைவு..! வார்த்தைகளால் விளையாடும் பார்த்திபன்..! பட்டுக்கோட்டை பிரபாகர் வருத்தம்..!
    Editor web1
    • Website

    Related Posts

    சென்னை : லண்டன் விமானத்தில் மோதிய பறவை..! விமானியின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்..!

    July 13, 2026

    சொத்துக்குவிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    July 13, 2026

    மோடி முன்பு சாந்தூர் வாசித்த ஜப்பான் பிரதமர்; இசைக்கருவியின் பாரம்பரியத்தை விளக்கிய இந்திய தூதரகம்

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை : லண்டன் விமானத்தில் மோதிய பறவை..! விமானியின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்..!

    சொத்துக்குவிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    மோடி முன்பு சாந்தூர் வாசித்த ஜப்பான் பிரதமர்; இசைக்கருவியின் பாரம்பரியத்தை விளக்கிய இந்திய தூதரகம்

    தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது: சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீடு தொடக்கம்!

    லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வீராங்கனையின் சாதனை..! வரலாற்றில் இடம் பிடித்து அசத்தல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.