Close Menu
    What's Hot

    அன்பே டயானாவில் என் நிஜவாழ்க்கையே கதாபாத்திரம் – நடிகை ரோஜா நெகிழ்ச்சி

    மரத்தில் ஏறி இரைக்கு நோட்டமிட்ட சிறுத்தை! மக்கள் அச்சம்!

    வீ த லீடர்ஸ் தவெகவுக்கு போட்டியா?  – அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பதில்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய தங்கத் தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்துத் இழுத்து துவக்கி வைத்தனர்!
    தமிழ்நாடு

    ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய தங்கத் தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்துத் இழுத்து துவக்கி வைத்தனர்!

    Editor web1By Editor web1July 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 13 09h53m40s334
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பஞ்சபூதத் தலங்களில் ‘நிலம்’ தத்துவத்திற்கு உரியதாகப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில், புதிதாகச் செய்யப்பட்ட தங்கத் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை மூலமாக சுமார் ரூ.30 கோடி மதிப்பில் புதிய தங்கத்தேர் வடிவமைக்கப்பட்டு, ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முறையாக 25 அடி உயரம், 13 அடி நீளம் மற்றும் 10 அடி அகலத்தில், அதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் இந்த தங்கத்தேர் மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    vlcsnap 2026 07 13 09h53m31s924

    முதலாம் ஆண்டு தங்கத்தேரோட்ட விழாவில், ஏலவார்குழலி அம்மையாருடன் சோமாஸ்கந்தர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் முதன்முறையாக புதிய தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இந்த விழாவில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வடம் பிடித்து இழுத்துத் தேரோட்டத்தைத் துவக்கி வைத்தார்.

    vlcsnap 2026 07 13 09h54m12s027

    இந்தநிகழ்வில் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் தென்னரசு, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், மாவட்ட ஆட்சியர் சினேகா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் ஸ்ரீ சங்கர விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    தேரோட்டத்திற்கு முன்னதாக தவில் மற்றும் நாதஸ்வர வித்வான்களின் இசை கச்சேரி, சிவனடியார்களின் சிவ வாத்தியங்கள் முழக்கம், திருப்பூர் காவடி குழுவினரின் ஆட்டம், கொங்கு மண்டல கும்மிப்பாட்டு, சிலம்பாட்டம் மற்றும் சிறப்பு வாணவேடிக்கைகள் எனப் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.

    இதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகரின் ராஜவீதிகளில் உலா வந்த தங்கத்தேரை ஏராளமான பக்தர்கள் “அரோகரா” முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்து, ஏலவார்குழலி உடனாய ஸ்ரீ ஏகாம்பரநாதரை மனமுருகி வழிபட்டுச் சென்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதுப்பொலிவுடன் வெளியாகும் ஐ.ஆர்.சி.டி.சி..! விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிப்பு..!
    Next Article கிருஷ்ணகிரியில் பயங்கரம்: FASTag பணம் கேட்ட டோல்கேட் ஊழியர் மீது 30 பேர் கொண்ட கும்பல் சரமாரி தாக்குதல்! 5 பேர் கைது!
    Editor web1
    • Website

    Related Posts

    மரத்தில் ஏறி இரைக்கு நோட்டமிட்ட சிறுத்தை! மக்கள் அச்சம்!

    July 13, 2026

    வீ த லீடர்ஸ் தவெகவுக்கு போட்டியா?  – அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பதில்!

    July 13, 2026

    மதுரை அருகே கோர விபத்து: 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்! பெண்கள் உட்பட 6 பேர் பலி!

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அன்பே டயானாவில் என் நிஜவாழ்க்கையே கதாபாத்திரம் – நடிகை ரோஜா நெகிழ்ச்சி

    மரத்தில் ஏறி இரைக்கு நோட்டமிட்ட சிறுத்தை! மக்கள் அச்சம்!

    வீ த லீடர்ஸ் தவெகவுக்கு போட்டியா?  – அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பதில்!

    மு.க.ஸ்டாலினுக்கு கோபம் வந்தால்..! தவெக ஆட்சி முடிந்துவிடும்..! ராஜேந்திர பாலாஜியின் பேச்சால் சர்ச்சை..!

    மதுரை அருகே கோர விபத்து: 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்! பெண்கள் உட்பட 6 பேர் பலி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.