Close Menu
    What's Hot

    பாடநூல் கழகத் தலைவரானார் லயோலா மணி – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வாழ்த்து

    அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம்: எகிறும் கச்சா எண்ணெய் விலை!

    திருவள்ளூர் : அமோனியா வாயு கசிவு விவகாரம்..! தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைப்பு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கன்னியாகுமரி : குட்கா வழக்கில் கைதான கைதி..! திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு..!
    Featured

    கன்னியாகுமரி : குட்கா வழக்கில் கைதான கைதி..! திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு..!

    Editor web4By Editor web4July 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையில் குட்கா வழக்கில் கைதான விசாரணை கைதி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 9-ஆம் தேதி தென் தாமரைக்குளம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறி, சபரி வர்மன் (35) என்பவரை தென் தாமரைக்குளம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 200 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சபரி வர்மன், நீதிமன்ற உத்தரவின்படி நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று காலை அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இருப்பினும், உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே உறுதி செய்யப்படும். இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் போலீசார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விசாரணை கைதி சபரிவர்மன் திடீர் மரணம் அடைந்ததை தொடர்ந்து மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் மருத்துவமனை வளாகத்தில் பதட்டமான சூழல் நிலவி வருவதை தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை பொறுமை காக்க வேண்டும் என போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னை : லண்டன் விமானத்தில் மோதிய பறவை..! விமானியின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்..!
    Next Article திமுக 40 எம்.பி தொகுதிகளிலும் ராஜினாமா செய்யத் தயாரா? – துரை வைகோ சவால்!
    Editor web4

    Related Posts

    பாடநூல் கழகத் தலைவரானார் லயோலா மணி – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வாழ்த்து

    July 13, 2026

    அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம்: எகிறும் கச்சா எண்ணெய் விலை!

    July 13, 2026

    திருவள்ளூர் : அமோனியா வாயு கசிவு விவகாரம்..! தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைப்பு..!

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாடநூல் கழகத் தலைவரானார் லயோலா மணி – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வாழ்த்து

    அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம்: எகிறும் கச்சா எண்ணெய் விலை!

    திருவள்ளூர் : அமோனியா வாயு கசிவு விவகாரம்..! தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைப்பு..!

    இந்திய பங்குச் சந்தையில் அதிகரித்த அந்நிய முதலீடு… காரணம் என்ன?

    தவெக குதிரை பேரம் குறித்து மனு; ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு – ஆர்.எஸ்.பாரதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.