Close Menu
    What's Hot

    லார்ட்ஸில் வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி… முதல் டெஸ்டிலேயே இங்கிலாந்தை வீழ்த்தியது!

    ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த மகளிர் வீராங்கனை விருது –  ஸ்ரீ சரணி உட்பட 3 பேர் பரிந்துரை

    குதிரை பேர அரசியல், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு: தவெக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Uncategorized»ஏ.சி . ரயில் பெட்டிகளில் 1.27 கோடி போர்வை, பெட்ஷீட், டவல் திருட்டு- அதிர்ச்சி தகவல்
    Uncategorized

    ஏ.சி . ரயில் பெட்டிகளில் 1.27 கோடி போர்வை, பெட்ஷீட், டவல் திருட்டு- அதிர்ச்சி தகவல்

    Editor web2By Editor web2July 13, 2026Updated:July 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    AC Coach
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய ரயில்வேயின் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் படுக்கைப் பொருட்கள் கடந்த 4 ஆண்டுகளில் 1.27 கோடிக்கும் அதிகமானவை திருடப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 69 ரயில்வே பிரிவுகளில் 54 பிரிவுகள் அளித்த தகவல்களின்படி, பெட்ஷீட், டவல், போர்வை, தலையணை, தலையணை உறை உள்ளிட்ட 1.27 கோடி பொருட்கள் காணாமல் போயுள்ளன. 2022-ஐ ஒப்பிடும்போது 2025-ல் இந்தத் திருட்டு 56% அதிகரித்துள்ளது.

    திருடப்பட்ட பொருட்களில் முகம் துடைக்கும் டவல்கள் 46.54 லட்சம் என்ற எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளன. தொடர்ந்து பெட்ஷீட்கள் 41.13 லட்சம், தலையணை உறைகள் 23.59 லட்சம், போர்வைகள் 12.95 லட்சம், தலையணைகள் 2.76 லட்சம் திருடப்பட்டுள்ளன.

    இந்தத் திருட்டால் படுக்கைப் பொருட்களை வழங்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு சுமார் ₹104.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இழப்பின் பெரும்பகுதி, தினக்கூலியாக பணிபுரியும் ஏசி கோச் அட்டெண்டர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    ராஜஸ்தானின் பிகானேர் ரயில்வே பிரிவில் மட்டும் 25.76 லட்சம் பொருட்கள் காணாமல் போனதாக பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்ததாக ராஞ்சி (9.31 லட்சம்), டெல்லி (8.21 லட்சம்), மும்பை (8.17 லட்சம்) ஆகிய பிரிவுகள் உள்ளன. அதேசமயம், திருச்சிராப்பள்ளி மற்றும் பாலக்காடு ரயில்வே பிரிவுகளில் எந்தப் படுக்கைப் பொருளும் திருடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பிரச்சினையைத் தடுக்க CCTV கண்காணிப்பு, Coach Mitra செயலி, ஒவ்வொரு ஏசி பெட்டிக்கும் தனி அட்டெண்டர் நியமனம், பயணிகள் இறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் படுக்கைப் பொருட்களை ஒப்படைக்க அறிவுறுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    IndianRailways LinenTheft RTI TrainTravel
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெரம்பூரில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ; எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார்
    Next Article ISSF உலகக் கோப்பையில் இந்தியா தங்கம் – வரலாற்று சாதனை படைத்த நீரு தண்டா
    Editor web2
    • Website

    Related Posts

    ISSF உலகக் கோப்பையில் இந்தியா தங்கம் – வரலாற்று சாதனை படைத்த நீரு தண்டா

    July 13, 2026

    இந்திய பங்குச் சந்தையில் அதிகரித்த அந்நிய முதலீடு… காரணம் என்ன?

    July 13, 2026

    மோடி முன்பு சாந்தூர் வாசித்த ஜப்பான் பிரதமர்; இசைக்கருவியின் பாரம்பரியத்தை விளக்கிய இந்திய தூதரகம்

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    லார்ட்ஸில் வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி… முதல் டெஸ்டிலேயே இங்கிலாந்தை வீழ்த்தியது!

    ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த மகளிர் வீராங்கனை விருது –  ஸ்ரீ சரணி உட்பட 3 பேர் பரிந்துரை

    குதிரை பேர அரசியல், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு: தவெக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

    ISSF உலகக் கோப்பையில் இந்தியா தங்கம் – வரலாற்று சாதனை படைத்த நீரு தண்டா

    ஏ.சி . ரயில் பெட்டிகளில் 1.27 கோடி போர்வை, பெட்ஷீட், டவல் திருட்டு- அதிர்ச்சி தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.