Close Menu
    What's Hot

    ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த மகளிர் வீராங்கனை விருது –  ஸ்ரீ சரணி உட்பட 3 பேர் பரிந்துரை

    குதிரை பேர அரசியல், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு: தவெக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

    ISSF உலகக் கோப்பையில் இந்தியா தங்கம் – வரலாற்று சாதனை படைத்த நீரு தண்டா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»குதிரை பேர அரசியல், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு: தவெக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!
    தமிழ்நாடு

    குதிரை பேர அரசியல், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு: தவெக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

    Editor web2By Editor web2July 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EPS
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெண்களின் பாதுகாப்பு, போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தத் தவறிய; குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற தவெக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அண்மையில், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம், லால்குடி தொகுதி, புள்ளம்பாடி ஒன்றியம், சிறுகளப்பூர் பகுதியில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்விஷயத்தில் தவெக அரசு துரித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். அதேபோல், போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் போதிய அக்கறை காட்டப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இச்செயல் ஆட்சியாளர்களின் அலட்சியத்தையும், மெத்தனப் போக்கையுமே காட்டுகிறது. இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாத; போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தத் தவறிய; குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற தவெக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 18.7.2026 சனிக் கிழமை காலை 10 மணியளவில், புள்ளம்பாடி அண்ணா திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தரப்பட்ட மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    AIADMK LawAndOrder TamilNaduPolitics TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleISSF உலகக் கோப்பையில் இந்தியா தங்கம் – வரலாற்று சாதனை படைத்த நீரு தண்டா
    Next Article ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த மகளிர் வீராங்கனை விருது –  ஸ்ரீ சரணி உட்பட 3 பேர் பரிந்துரை
    Editor web2
    • Website

    Related Posts

    பெரம்பூரில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ; எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார்

    July 13, 2026

    தவெகவில் இணைந்தது ஏன்? – எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்

    July 13, 2026

    பசுவதை தடை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த மகளிர் வீராங்கனை விருது –  ஸ்ரீ சரணி உட்பட 3 பேர் பரிந்துரை

    குதிரை பேர அரசியல், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு: தவெக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

    ISSF உலகக் கோப்பையில் இந்தியா தங்கம் – வரலாற்று சாதனை படைத்த நீரு தண்டா

    ஏ.சி . ரயில் பெட்டிகளில் 1.27 கோடி போர்வை, பெட்ஷீட், டவல் திருட்டு- அதிர்ச்சி தகவல்

    பெரம்பூரில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ; எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.