Close Menu
    What's Hot

    சிங்கக் குட்டியுடன் மாஸ் லுக்: சிவராஜ்குமாரின் ‘Welcome to Wildlife’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    வியட்நாம் படகு விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் மும்பை வந்தடைந்தன!

    தமிழகத்தில் “குதிரை பேர” அரசியல் அதிகரிப்பு!. உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே போட்டி!. CPI வீரபாண்டியன் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»‘தமிழ் முருகன்’ படத்தில் தனுஷின் தோற்றம்: ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திர வீடியோ வெளியீடு!
    சினிமா

    ‘தமிழ் முருகன்’ படத்தில் தனுஷின் தோற்றம்: ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திர வீடியோ வெளியீடு!

    Editor web1By Editor web1July 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 11
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தனுஷ் – வெற்றிமாறன் ஐந்தாவது முறையாக இணைந்துள்ள ‘தமிழ் முருகன்’ திரைப்படத்தில் தனுஷின் புதிய கதாபாத்திர தோற்றம் மற்றும் அறிமுக வீடியோ வெளியாகி உள்ளது.

    ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வட சென்னை’ மற்றும் ‘அசுரன்’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் ‘தமிழ் முருகன்’. அறிவுமதி எழுதியுள்ள இக்கதையை, தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ மற்றும் ‘புரொடக்ஷன் மைல்ஸ் டு கோ’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இத்திரைப்படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

    இது ஒரு பண்டைய கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட திரைப்படமாக உருவாகிறது. தமிழ் மக்களுக்கும், தமிழ் நிலத்திற்கும் பாதுகாவலனாக வரும் ஒரு வீரமிக்க கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியான நிலையில், தற்போது தனுஷின் கதாபாத்திர தோற்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    கையில் வேல் ஏந்தி, யானை மீது கம்பீரமாக அமர்ந்திருக்கும் தனுஷின் இந்த தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.  இப்படத்தில் தனுஷுடன் இணைந்து மற்றொரு முன்னணி நடிகரான விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதாலும், இது ஒரு பீரியட் ஃபிலிம் (Historical Period Film) என்பதாலும் ‘தமிழ் முருகன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

    அதேவேளையில், ‘தமிழ் முருகன்’ என்ற தலைப்பு வைத்து, தமிழ்க் கடவுள் முருகனின் பின்னணியில் கதைக்களமும், தனுஷின் கதாபாத்திரமும் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. முருகு என்றால் அழகு என்று பொருள்படும் வகையில், முருகன் அழகான தோற்றம் கொண்டிருக்கும்நிலையில், தனுஷ்   தாடியுடன் இருப்பது போன்று வெளியிடப்பட்டுள்ள போஸ்டருக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பும், நம்பிக்கையை சிதைக்கும் வகையில்  இருப்பதாகவும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபழவேற்காட்டில் பயங்கரம்: வீடு புகுந்து பெண் கொடூரக் கொலை! 15 சவரன் நகைகள் கொள்ளை!
    Next Article கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: தனது பிறந்தநாளில் விருதைப் பெற்றார்!
    Editor web1
    • Website

    Related Posts

    சிங்கக் குட்டியுடன் மாஸ் லுக்: சிவராஜ்குமாரின் ‘Welcome to Wildlife’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    July 14, 2026

    சென்னையில் புதிய வீடு வாங்கிய ஸ்ருதி ஹாசன்!. எளிமையாக நடைபெற்ற கிரகப்பிரவேச விழா!

    July 14, 2026

    நடிகர் சங்க கட்டிடம்…நிஜமாகும் கனவு இல்லம்… நடிகர் விஷால் நெகிழ்ச்சி!

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சிங்கக் குட்டியுடன் மாஸ் லுக்: சிவராஜ்குமாரின் ‘Welcome to Wildlife’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    வியட்நாம் படகு விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் மும்பை வந்தடைந்தன!

    தமிழகத்தில் “குதிரை பேர” அரசியல் அதிகரிப்பு!. உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே போட்டி!. CPI வீரபாண்டியன் அறிவிப்பு!

    லண்டனில் பேரனின் பட்டமளிப்பு விழா!. இன்பநிதியை நெகிழ்ச்சியுடன் கட்டித் தழுவி வாழ்த்திய மு.க.ஸ்டாலின்!

    சென்னையில் புதிய வீடு வாங்கிய ஸ்ருதி ஹாசன்!. எளிமையாக நடைபெற்ற கிரகப்பிரவேச விழா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.