முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது, தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்துகளை குறைக்க தனி செயல் திட்டம் உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் தமிழ்நாட்டில் இன்னும் ஏன் அதிவிரைவு சாலைகள் அமைக்கவில்லை எனக் கேள்வி எழுப்பிய முதலமைச்சர், விரைவில் தமிழகத்தில் அதிவிரைவு சாலைகளை அமைக்கவும் அதற்கான திட்டம் தீட்டவும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நகர்புற வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு சாலை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 10 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை உருவாக்கவும் இந்த ஆய்வுக் கூட்டத்தில், முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
