Close Menu
    What's Hot

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் மோசடி பதிவு? – வன்மத்துடன் அவதூறு பரப்புகின்றனர்– அமைச்சர் ரமேஷ்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»ஐ.நா. உறுப்பு நாடு அங்கீகாரம்: பாலஸ்தீனத்துக்கு இந்தியா மீண்டும் ஆதரவு
    உலகம்

    ஐ.நா. உறுப்பு நாடு அங்கீகாரம்: பாலஸ்தீனத்துக்கு இந்தியா மீண்டும் ஆதரவு

    Editor web2By Editor web2July 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    India Palaestine
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஐக்கிய நாடுகள் சபையின் முழு உறுப்பு நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற பாலஸ்தீனத்தின் கோரிக்கைக்கு இந்தியா தனது தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

    பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற பாலஸ்தீன நன்கொடையாளர் குழுவின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில், இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை செயலாளர் ஸ்ரீபிரியா ரங்கநாதன் கலந்து கொண்டார்.

    ஐரோப்பிய ஆணையம் மற்றும் பாலஸ்தீன ஆணையம் இணைந்து நடத்திய இந்தக் கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், பாலஸ்தீனம், சர்வதேச நட்பு நாடுகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    Palestine Donor Group

    கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீபிரியா ரங்கநாதன், “பாலஸ்தீன மக்களுடன் இந்தியா நீண்டகால நட்புறவை பேணி வருகிறது. இரு நாடுகள் தீர்வு (Two-State Solution) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முயற்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது” என்று தெரிவித்தார்.

    மேலும், பாலஸ்தீன மக்களுக்காக மனிதாபிமான உதவிகள், திறன் மேம்பாட்டு திட்டங்கள், கல்வி, சுகாதாரம், தொழிற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா தொடர்ந்து பங்களித்து வருவதாகவும் அவர் கூறினார்.

    அத்துடன், பெண்கள் மேம்பாடு, நிறுவன கட்டமைப்பு மற்றும் சுகாதாரத் துறைகளிலும் இந்தியா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், பாலஸ்தீன மக்களின் மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்தியா உறுதியான கூட்டாளியாக தொடர்ந்து செயல்படும் என்றும் உறுதியளித்தார்.

    ForeignPolicy india Palestine UnitedNations
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசங்கத்துல உறுப்பினரா இல்லைன்னா நடிக்க முடியாது – சின்னத்திரை நடிகர்கள் சங்கம் அறிவிப்பு!
    Next Article  சாத்தங்குடி காதலர்கள் உயிரிழந்த விவகாரம்! நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அமைப்பினரால் தள்ளுமுள்ளு!
    Editor web2
    • Website

    Related Posts

    ஐ.நா. முழு உறுப்பினர் அந்தஸ்து; புதிய திட்டங்கள் தொடங்கப்படும்-  பாலஸ்தீனத்துக்கு ஆதரவுக் கரம் நீட்டும் இந்தியா!

    July 14, 2026

    அமெரிக்காவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்..!! வளைகுடா நாடுகள் மீது டிரம்பின் புதிய அழுத்தம்..!!

    July 14, 2026

    ரஷ்ய ராணுவ வீரரை தூக்கி வீசிய துப்பாக்கி..!! திகிலூட்டும் வீடியோ.. இணையத்தில் வைரல்..!!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் மோசடி பதிவு? – வன்மத்துடன் அவதூறு பரப்புகின்றனர்– அமைச்சர் ரமேஷ்

    பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100கோடி நிலம் மோசடி வழக்கு..! அமைச்சரை தொடர்புபடுத்த வேண்டாம்..!

    கோகுல்ராஜ் கொலை வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.