Close Menu
    What's Hot

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எத்தனை பொய் கதைகளை பரப்பினாலும்… கோயில் நிலங்களை பாதுகாப்பதில் தவெக அரசு உறுதியாக நிற்கும்!. அமைச்சர் ரமேஷ்!
    Featured

    எத்தனை பொய் கதைகளை பரப்பினாலும்… கோயில் நிலங்களை பாதுகாப்பதில் தவெக அரசு உறுதியாக நிற்கும்!. அமைச்சர் ரமேஷ்!

    Editor web3By Editor web3July 15, 2026Updated:July 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    minister ramesh
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 100 கோடி ரூபாய் மதிப்புள்ள திருமடத்து நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் எத்தனை பொய்களை எங்கள் மீது பரப்பினாலும் அதையெல்லாம் தாண்டி உண்மையை நிலைநாட்ட தவெக அரசு உறுதியாக நிற்கும் என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, பழனி அடிவாரம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலத்தை தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டி, கடந்த ஏப்ரல் மாதம் சில தனி நபர்கள் மாண்பமை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ஏற்கனவே இந்த நிலம் தொடர்பாக உள்ள வழக்குகளை மறைத்து, தக்காரை வழக்கில் சேர்க்காமல் தனி நீதிபதியிடம் பெற்ற உத்தரவுக்கு எதிராக, கடந்த ஜூன் 30 அன்று அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடம் சார்பில் பழனி திருக்கோயில் இணை ஆணையர் மூலம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தோம்.

    மேலும் இந்த மடத்தின் நிலத்தை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று இந்த வழக்குகளை மேற்கோள் காட்டி, கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று பழனி திருக்கோயில் இணை ஆணையர் மூலம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் கடிதம் எழுதப்பட்டது.

    இந்த சூழலில் கடந்த ஜூலை 6ஆம் தேதியன்று நீதிமன்ற வழக்கு மற்றும் இணை ஆணையர் கடிதத்தையும் பரிசீலனை செய்யாமல் நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட தகவல் கிடைத்த உடன் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மற்றும் சார் பதிவாளர் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டு, துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றவியல் விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று மாண்பமை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரித்ததில்,
    மடத்தின் நிலமானது முறைகேடாக பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பதை மாண்புமிகு நீதியரசர்கள் உறுதி செய்து பத்திரப்பதிவை ரத்து செய்துள்ளனர்.

    மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    அரசின் மீதும், என் மீதும் சில தீய சக்திகள் எப்படியெல்லாம் பொய் கதைகளை பரப்ப முயற்சித்தாலும் அதையல்லாம் தாண்டி, உண்மையை நிலைநாட்டி
    திருக்கோயில் நிலங்களை பாதுகாப்பதில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு என்றும் உறுதியாக நிற்கும் என்று பதிவிட்டுள்ளார்.

    koil land Minister Ramesh palani koil palani temple lands TVK Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருச்செந்தூர் ‘வீ த லீடர்ஸ்’ மாநாடு ரத்து: ஆகஸ்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு..!!
    Next Article தடை.. அதை உடை..!! ஒருவழியா.. ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு..!!
    Editor web3
    • Website

    Related Posts

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    July 15, 2026

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    July 15, 2026

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    அடடே..!! 10 நிமிஷம் தான்.. வீட்டுக்கே வரும் சிலிண்டர்.. அசத்தும் இன்ஸ்டாமார்ட்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.