Close Menu
    What's Hot

    மயிலாடுதுறை ; பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்…. பெட்ரோலுக்கு பணம் கேட்டதால் போதை இளைஞர்கள் வெறிச்செயல்

    திருப்பதி கோயில் சாதனை!. ஒரே நாளில் ரூ. 97 கோடி!. நன்கொடை செலுத்த முண்டியடித்த பக்தர்கள்!. என்ன காரணம்?

    இஸ்ரோவில் ஒரே ஆண்டில் 120 விஞ்ஞானிகள் விலகல்… புதிய விதிகளே காரணமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்….  புதிய வாய்ப்புகளைத் திறக்கும்-  பியூஷ் கோயல் நம்பிக்கை
    Featured

    இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்….  புதிய வாய்ப்புகளைத் திறக்கும்-  பியூஷ் கோயல் நம்பிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 piyus goail
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியா–ஐரோப்பிய ஒன்றியம் (EU) இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) இந்திய தொழில்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) மற்றும் பொதுமக்களுக்கு கணிசமான பலன்களை வழங்கும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் இந்திய தொழில்துறை பிரதிநிதிகளுடன் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய FTA-வின் சாத்தியமான பலன்கள் குறித்து விரிவாக விவாதித்தார்.

     இந்தக் கூட்டத்தில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு (FICCI), இந்திய தொழில் கூட்டமைப்பு (CII), இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு (ASSOCHAM) உள்ளிட்ட முன்னணி தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

     இதுகுறித்து சமூக வலைதளமான X-இல், “இந்தியா–EU சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இந்திய தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறப்பதோடு, தொழில் நிறுவனங்கள், MSME-கள் மற்றும் மக்களுக்கு நேரடி பலன்களை அளிக்கும் வகையில் இருக்கும்” என்று பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சந்திப்பு, புதன்கிழமை நடைபெற்ற 3-வது இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய தொழில்துறை வட்டமேசை மாநாட்டை தொடர்ந்து நடைபெற்றது. இதில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா ஆகியோர் பங்கேற்றனர்.

     இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், புதுமை மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தினர்.

     மேலும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்டார்ட்அப், ஆராய்ச்சி மற்றும் புதுமைத்துறை ஆணையர் எகதெரினா ஜஹாரியேவாவை சந்தித்து, பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்கள், புதுமை மையங்கள், ஸ்டார்ட்அப் வளர்ச்சி மற்றும் Horizon Europe திட்டத்தில் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார்.

     அதேபோல், சர்வதேச கூட்டாண்மைக்கான ஐரோப்பிய ஆணையர் ஜோசெஃப் சிகேலாவை சந்தித்த ஜெய்சங்கர், இணைப்பு திட்டங்கள், முத்தரப்பு கூட்டாண்மை, இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) மற்றும் பசுமைக் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

     

    India EU FTA India EU Trade India European Union Free Trade Agreement Piyush Goyal
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதப்பு செஞ்சா.. உடனே பதவி போய்டும்.. அது யாரா இருந்தாலும் சரி..!! அமைச்சர்களுக்கு CM விஜய் வார்னிங்..!!
    Next Article திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்ட மேம்பாலச் சாலை திட்டம் ரத்து..! அமைச்சரவையில் அதிரடி முடிவு..! 
    Editor TN Talks

    Related Posts

    மயிலாடுதுறை ; பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்…. பெட்ரோலுக்கு பணம் கேட்டதால் போதை இளைஞர்கள் வெறிச்செயல்

    July 16, 2026

    திருப்பதி கோயில் சாதனை!. ஒரே நாளில் ரூ. 97 கோடி!. நன்கொடை செலுத்த முண்டியடித்த பக்தர்கள்!. என்ன காரணம்?

    July 16, 2026

    இஸ்ரோவில் ஒரே ஆண்டில் 120 விஞ்ஞானிகள் விலகல்… புதிய விதிகளே காரணமா?

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மயிலாடுதுறை ; பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்…. பெட்ரோலுக்கு பணம் கேட்டதால் போதை இளைஞர்கள் வெறிச்செயல்

    திருப்பதி கோயில் சாதனை!. ஒரே நாளில் ரூ. 97 கோடி!. நன்கொடை செலுத்த முண்டியடித்த பக்தர்கள்!. என்ன காரணம்?

    இஸ்ரோவில் ஒரே ஆண்டில் 120 விஞ்ஞானிகள் விலகல்… புதிய விதிகளே காரணமா?

    பள்ளியில் மத திணிப்பு?. சிறுவர்களின் டைரியில் எழுதப்பட்ட வீட்டுப்பாடம்!. பெரும் சர்ச்சை!

    தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை… 15 மாவட்டங்களுக்கு அலர்ட்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.