Close Menu
    What's Hot

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    பிரபாஸின் ‘பௌசி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: டிச. 3-ல் பான்-இந்தியா வேட்டை!

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“CBSE: 9-ஆம் வகுப்பில் 3-வது மொழி வேண்டாமே..!”- உச்சநீதிமன்றம் அறிவுரை
    Featured

    “CBSE: 9-ஆம் வகுப்பில் 3-வது மொழி வேண்டாமே..!”- உச்சநீதிமன்றம் அறிவுரை

    Editor web2By Editor web2July 16, 2026Updated:July 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CBSE
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-ஆம் வகுப்பில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்துவது மாணவர்களுக்கு கூடுதல் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால், அதை 5 அல்லது 6-ஆம் வகுப்பிலேயே அறிமுகப்படுத்துவது நல்லது என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு வாய்மொழி அறிவுரை வழங்கியுள்ளது.

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. விசாரணையின்போது, மும்மொழிக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது.

    அப்போது நீதிபதி பி.வி. நாகரத்னா, “மூன்றாவது மொழி என்றால் அது இந்தி மட்டுமல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஆனால் 9-ஆம் வகுப்பில் புதிய மொழியை கட்டாயமாக அறிமுகப்படுத்துவது சரியல்ல. அந்த வகுப்பில் மாணவர்கள் ஏற்கனவே பொதுத்தேர்வு அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். புதிய மொழியை 5 அல்லது 6-ஆம் வகுப்பிலேயே கற்பிக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தார். இந்த நீதிமன்றத்தின் கருத்தை மத்திய அரசிடம் தெரிவிக்குமாறும் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞரிடம் அறிவுறுத்தினார்.

    மேலும், “மத்திய அரசின் திட்டம் என்பதற்காகவே அதை நிராகரிக்கக் கூடாது. மாநிலத்தின் கல்வி முறை தொடரலாம்; அதே நேரத்தில் மத்திய அரசு பள்ளிகளைத் தடுக்கக் கூடாது” என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

    supreme court

    தமிழக அரசு சார்பில், நவோதயா பள்ளிகளில் பின்பற்றப்படும் மும்மொழிக் கொள்கையே மாநிலத்தின் எதிர்ப்புக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதிபதி நாகரத்னா, மும்மொழிக் கொள்கை இந்தி திணிப்பை கட்டாயப்படுத்துவதில்லை என்று கூறினார்.

    இதற்கிடையில், புதிய அரசு பதவியேற்றுள்ளதால், நவோதயா பள்ளிகள் தொடர்பாக அதன் நிலைப்பாட்டை தெரிவிக்க 3 வார அவகாசம் வழங்கிய உச்சநீதிமன்றம், வழக்கை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    CBSE NavodayaSchools supremecourt ThreeLanguagePolicy
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“பாமக வாக்கு வங்கி சரிவு; அன்புமணியை தலைவராக ஏற்க முடியாது”
    Next Article 2 மாதங்களாக சம்பளம் இல்லை; Childline பணியாளர்களின் வாழ்வாதாரத்தை  பாதுகாத்திடுக!. உதயநிதி ஸ்டாலின்!
    Editor web2
    • Website

    Related Posts

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    July 16, 2026

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    July 16, 2026

    உணவகத்தில் மயோனைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு ஷிகெல்லா தொற்று!. கேரளாவில் அதிர்ச்சி!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    பிரபாஸின் ‘பௌசி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: டிச. 3-ல் பான்-இந்தியா வேட்டை!

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    உணவகத்தில் மயோனைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு ஷிகெல்லா தொற்று!. கேரளாவில் அதிர்ச்சி!

    ஒரே உலகக்கோப்பையில் இரு பெரும் விருதுகள்: வரலாறு படைப்பாரா மெஸ்ஸி?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.