Close Menu
    What's Hot

    72-வது தேசிய திரைப்பட விருதுகள் – இன்று மாலை அறிவிப்பு

    தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி விவகாரம்.. சிக்கிய 3 பேரிடம் இருந்து ரூ.2 கோடி பறிமுதல்..!!

    ரஷ்யாவை அதிரவைத்த உக்ரைன் டிரோன் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ராஜமௌலி திரைப்படத்தில் ப்ரியங்கா சோப்ரா..! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!
    Featured

    ராஜமௌலி திரைப்படத்தில் ப்ரியங்கா சோப்ரா..! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

    Editor web4By Editor web4July 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய திரையுலகை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்ற இயக்குநர்களில் மிக முக்கியமானவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவரது பாகுபலி திரைப்படம் வரலாற்று சாதனை படைத்தது. இந்திய அளவில் அதிக வசூலை குவித்ததுடன், பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    அதனை தொடர்ந்து அவர் இயக்கி இருந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் பாகுபலியை போன்றே பான் இந்தியா திரைப்படமாக உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அத்தோடு இப்படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு கூத்து பாடலுக்காக படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    அவரது அடுத்த லட்சியப் படைப்பான வாரணாசி திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. சுமார் ரூ.1,400கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் கி.பி.512 முதல் தற்காலம் வரை திரேதா யுகம் முதல் கலியுகம் வரை எனப் பல காலகட்டங்களை இணைக்கும் ஒரு அறிவியல் புனைகதை மற்றும் ஆன்மீக சாகசப் படமாக உருவாகி வருகிறது.

    இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ‘மகேஷ் பாபு’ கதாநாயகனாக ‘ருத்ரா’ மற்றும் ‘ஸ்ரீராமர்’ என இருவேறு பரிமாணங்களில் நடிக்கிறார். மலையாள முன்னணி நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் ‘கும்பா’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் இப்படத்தில் மந்தாயினி என்ற கதாபாத்திரத்தில் உலகளாவிய நடிகையான ப்ரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    ப்ரியங்காவின் 44வது பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. பல்வேறு முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருவதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இத்திரைப்படம் 2027-ல் ஏப்ரல் 7ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article12 வயது சிறுவன் விபத்தில் பலியான வழக்கு… தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு பிடி வாரண்ட்!
    Next Article எமர்ஜென்ஸி காலத்தில் சிறையில் இருந்தவன் நான்… ஐ.ஏ.எஸ் அகாடமி  பயிற்சி நிறுவன நிகழ்வில்  ஆளுநர் அர்லேகர் பேச்சு
    Editor web4

    Related Posts

    72-வது தேசிய திரைப்பட விருதுகள் – இன்று மாலை அறிவிப்பு

    July 18, 2026

    தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி விவகாரம்.. சிக்கிய 3 பேரிடம் இருந்து ரூ.2 கோடி பறிமுதல்..!!

    July 18, 2026

    ரஷ்யாவை அதிரவைத்த உக்ரைன் டிரோன் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்..!!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    72-வது தேசிய திரைப்பட விருதுகள் – இன்று மாலை அறிவிப்பு

    தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி விவகாரம்.. சிக்கிய 3 பேரிடம் இருந்து ரூ.2 கோடி பறிமுதல்..!!

    ரஷ்யாவை அதிரவைத்த உக்ரைன் டிரோன் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்..!!

    இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு நடவடிக்கை – அமைச்சர் வன்னியரசு தகவல்

    குஜராத்: அரசுப்பள்ளி விடுதியில் கிச்சடி, கோதுமை ரொட்டி.. 147 மாணவிகள் ஹாஸ்பிடலில் அட்மிட்..!! என்ன ஆச்சு..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.