Close Menu
    What's Hot

    தவெக ஆட்சி கவிழுமா? – அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்… அமைச்சர்  மரிய வில்சன் சாடல்

    பழநி நில மோசடி வழக்கில் என்னை இழுப்பதா? அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்..!

    அமைச்சரவை கூட்டத்தில் விஜய் இதைத்தான் சொன்னார்..!! அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»12 வயது சிறுவன் விபத்தில் பலியான வழக்கு… தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு பிடி வாரண்ட்!
    Featured

    12 வயது சிறுவன் விபத்தில் பலியான வழக்கு… தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு பிடி வாரண்ட்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 shaji purushothaman
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுபோதையில் காரை ஓட்டிச் சென்று நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றியதில், 12 வயது சிறுவன் பலியான வழக்கில்,  தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு  மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     கடந்த 2013 மே 22ஆம் தேதி,  சென்னை எழும்பூா் பாந்தியன் சாலையில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது மதுபோதையில் சொகுசு காரை ஏற்றியதில், 12 வயது சிறுவன் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், EMPEE குழுமத்தின் தலைவா் எம்.என்.புருஷோத்தமனின் மகன் ஷாஜி புருஷோத்தமனை குற்றவாளி என அறிவித்து, சென்னை 7வது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி பி.ஸ்ரீகுமாா் தீர்ப்பளித்திருந்தார்.

    அன்றைய தினம், ஷாஜி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தும்  உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில், பிடிவாரண்ட்–டை  எதிர்த்து  ஷாஜி புருஷோத்தமன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பிடி வாரண்ட்–டை திரும்பப் பெற்றதுடன், விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கு, அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, முதுகு தண்டுவட பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதால், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரியும், காணொளி காட்சி மூலம் ஆஜராக அனுமதி கோரியும் ஷாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த மனுக்களை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆஜராகாததால், விலக்களிக்க முடியாது என கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

    தண்டனை விவரங்கள் அறிவிக்க குற்றம் சாட்டப்பட்டவர் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்பதால்,  காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதி கோரிய மனுவை ஏற்க முடியாது என தள்ளுபடி செய்த அமர்வு நீதிமன்ற நீதிபதி, ஷாஜி புருஷோத்தமனை கைது செய்து ஆஜர்படுத்தும் வகையில், அவருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்து, விசாரணையை ஜூலை 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    12-year-old boy Accident Case Arrest Warrant Businessman Non-Bailable Warrant Shaji Purushothaman
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleயானைகளுக்கு சிகிச்சை.. தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு NO சொன்ன சென்னை ஐகோர்ட்..!!
    Next Article ராஜமௌலி திரைப்படத்தில் ப்ரியங்கா சோப்ரா..! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!
    Editor TN Talks

    Related Posts

    தவெக ஆட்சி கவிழுமா? – அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்… அமைச்சர்  மரிய வில்சன் சாடல்

    July 18, 2026

    பழநி நில மோசடி வழக்கில் என்னை இழுப்பதா? அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்..!

    July 18, 2026

    அமைச்சரவை கூட்டத்தில் விஜய் இதைத்தான் சொன்னார்..!! அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக ஆட்சி கவிழுமா? – அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்… அமைச்சர்  மரிய வில்சன் சாடல்

    பழநி நில மோசடி வழக்கில் என்னை இழுப்பதா? அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்..!

    அமைச்சரவை கூட்டத்தில் விஜய் இதைத்தான் சொன்னார்..!! அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!!

    பிறந்தநாள் ;  தவெக தொண்டர்களுடன் கேக் வெட்டி அமைச்சர் புஸ்சி ஆனந்த் கொண்டாட்டம்

    கைலாசா பிரதிநிதிகளுடன் 3 தமிழக அமைச்சர்கள் சந்திப்பு? நித்யானந்தா பதிவு கிளப்பிய புதிய சர்ச்சை..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.