Close Menu
    What's Hot

    23ம் தேதி ‘ஜனநாயகன்’ ரிலீஸ்.. சும்மா தாறுமாறா கொண்டாடணும்..!! அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தல்..!!

    காவிரி நதிநீர் பங்கீடு: வரும் 22ம் தேதி.. டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!!

    தவெக ஆட்சி கவிழுமா? – அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்… அமைச்சர்  மரிய வில்சன் சாடல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எமர்ஜென்ஸி காலத்தில் சிறையில் இருந்தவன் நான்… ஐ.ஏ.எஸ் அகாடமி  பயிற்சி நிறுவன நிகழ்வில்  ஆளுநர் அர்லேகர் பேச்சு
    Featured

    எமர்ஜென்ஸி காலத்தில் சிறையில் இருந்தவன் நான்… ஐ.ஏ.எஸ் அகாடமி  பயிற்சி நிறுவன நிகழ்வில்  ஆளுநர் அர்லேகர் பேச்சு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 governor A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் சம்கல்ப் (Samkalp) ஐஏஎஸ் அகாடமி பயிற்சி நிறுவனத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் விஸ்வநாதன் அர்லேக்கர் பங்கேற்றார்.

    இந்நிகழ்வில் ஐஏஎஸ் அகாடமி பயிற்சியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழக ஆளுநர், தமிழில் வணக்கம் என கூறி உரையை துவக்கினார்.

    அவர் பேசுகையில், ‘சம்கல்ப் ஐஏஎஸ் நிறுவனத்தினர் வருங்காலத்தை எதிர்நோக்கி செயலாற்றுகிறார்கள். ‘விக்சித் பாரத் 2047’ என்ற இந்தியாவின் வளர்ச்சி இலக்கை அடைய அர்ப்பணிப்பும், உயர்ந்த மதிப்புகளும் கொண்ட சிவில் சர்வீஸ் அதிகாரிகளை உருவாக்குவதில் சம்கல்ப் IAS அகாடமி முக்கிய பங்காற்றி வருவதாக பாராட்டினார்.

    002 governor

    எமர்ஜென்சி காலத்தில் நான் ஜெயிலில் இருந்தேன். ஜாலியன் வாலாபாக் சம்பவம் நாம் அனைவரும் நன்கு அறிவோம். பிரிட்டிஷ்காரர்கள் கூறுவதை நாம் கேட்க வேண்டி இருந்தது. நாம் அடிமைகளாக இருந்தோம். தற்போது அவை மாறி இது நம் நாடு என மாறி உள்ளோம்.

    IAS பயிற்சியில் நீங்கள் வித்தியாசமாக ஒவ்வொன்றையும் சிந்திக்க வேண்டும், நீங்கள் மக்கள் பணி ஆற்றுபவர்கள், அந்த பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    2047 வளர்ச்சி அடைந்த பாரதம் என்பது நாம் அனைவருடைய இலக்கு. அதை நோக்கியே நாம் செயல்பட வேண்டும்.

    மேலும், யூபிஎஸ்சி (UPSC) தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் இந்தியாவின் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தைப் பேணிக் காக்க வேண்டும் என்றும், காலனித்துவ மனப்பான்மையை விலக்கி, நேர்மை, கருணை மற்றும் மக்கள் சேவை மனப்பான்மையுடன் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இந்நிகழ்வில் ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகளில் பயன்படுத்த வேண்டிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியின் போது, சம்கல்ப் IAS அகாடமி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) தமிழக ஆளுநர் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் கல்வி ஒத்துழைப்பு, தலைமைத்துவ மேம்பாடு மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கான திறன் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இந்நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட கல்வி நிறுவனத்தினர் மற்றும் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

    C.P. Radhakrishnan Arlekar Emergency emergency period Governor R.N. Ravi Arlekar
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராஜமௌலி திரைப்படத்தில் ப்ரியங்கா சோப்ரா..! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!
    Next Article நேற்று ஆய்வு.. இன்று அதிரடி ஆக்ஷன்..!! தீயாய் களமிறங்கி மாஸ் காட்டும் முதலமைச்சர் விஜய்..!!
    Editor TN Talks

    Related Posts

    23ம் தேதி ‘ஜனநாயகன்’ ரிலீஸ்.. சும்மா தாறுமாறா கொண்டாடணும்..!! அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தல்..!!

    July 18, 2026

    காவிரி நதிநீர் பங்கீடு: வரும் 22ம் தேதி.. டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!!

    July 18, 2026

    தவெக ஆட்சி கவிழுமா? – அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்… அமைச்சர்  மரிய வில்சன் சாடல்

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    23ம் தேதி ‘ஜனநாயகன்’ ரிலீஸ்.. சும்மா தாறுமாறா கொண்டாடணும்..!! அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தல்..!!

    காவிரி நதிநீர் பங்கீடு: வரும் 22ம் தேதி.. டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!!

    தவெக ஆட்சி கவிழுமா? – அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்… அமைச்சர்  மரிய வில்சன் சாடல்

    பழநி நில மோசடி வழக்கில் என்னை இழுப்பதா? அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்..!

    அமைச்சரவை கூட்டத்தில் விஜய் இதைத்தான் சொன்னார்..!! அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.