Close Menu
    What's Hot

    23ம் தேதி ‘ஜனநாயகன்’ ரிலீஸ்.. சும்மா தாறுமாறா கொண்டாடணும்..!! அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தல்..!!

    காவிரி நதிநீர் பங்கீடு: வரும் 22ம் தேதி.. டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!!

    தவெக ஆட்சி கவிழுமா? – அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்… அமைச்சர்  மரிய வில்சன் சாடல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நேற்று ஆய்வு.. இன்று அதிரடி ஆக்ஷன்..!! தீயாய் களமிறங்கி மாஸ் காட்டும் முதலமைச்சர் விஜய்..!!
    Featured

    நேற்று ஆய்வு.. இன்று அதிரடி ஆக்ஷன்..!! தீயாய் களமிறங்கி மாஸ் காட்டும் முதலமைச்சர் விஜய்..!!

    editor5By editor5July 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 22 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேற்று சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, மாணவர்கள் தங்கள் பல்வேறு குறைகளை நேரடியாகத் தெரிவித்தனர். இதையடுத்து சமூக நீதித்துறை இன்று பல முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    முதலமைச்சர் ஆய்வின்போது மாணவர்கள் முன்வைத்த முக்கிய புகார்கள் உணவு தரம், விடுதி வசதிகள் மற்றும் நுழைவு நேரம் தொடர்பானவை. விடுதியில் வழங்கப்படும் உணவு மிகவும் தரமற்ற நிலையில் இருப்பதாகவும், பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் தெரிவித்தனர். அரசு பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்திருந்தும், நடைமுறையில் பிரச்னைகள் தொடர்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

    கடந்த ஆண்டு அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் (AISF) சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டதும், புழுக்கள் கலந்த அசைவ உணவு பிரச்னைக்குப் பிறகு ஐந்து நாட்கள் மட்டும் தரமான உணவு வழங்கப்பட்டு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியதும் மாணவர்களின் முக்கிய குற்றச்சாட்டுகளாக இருந்தன. மேலும், பகுதி நேர வேலை செய்து டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இரவு 10 மணிக்கு மேல் விடுதிக்கு வந்தால் கதவு மூடப்பட்டுவிடுவதால் வெளியில் தூங்கும் அவலநிலை ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.

    இந்தப் புகார்களைத் தொடர்ந்து முதலமைச்சர் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டதை அடுத்து, சமூக நீதித்துறை அதிகாரிகள் பல்வேறு தீர்வுகளை அறிவித்துள்ளனர். உணவுப் பட்டியலை உடனடியாக மாற்றி, சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்ட இட்லி மற்றும் சப்பாத்தியை மீண்டும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. விடுதியில் கட்டி முடிக்கப்பட்டும் இதுவரை திறக்கப்படாத கைப்பந்து மைதானத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கு உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பகுதி நேரப் பணிக்குச் செல்லும் மாணவர்கள் இரவு 12 மணி வரை விடுதிக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதை தொடர்ந்து கண்காணிக்க இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக நீதித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களின் குறைகளுக்கு விரைவான தீர்வு காணப்பட்டதால் விடுதியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் அரசின் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    cm vijay social justice hostel
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎமர்ஜென்ஸி காலத்தில் சிறையில் இருந்தவன் நான்… ஐ.ஏ.எஸ் அகாடமி  பயிற்சி நிறுவன நிகழ்வில்  ஆளுநர் அர்லேகர் பேச்சு
    Next Article கைலாசா பிரதிநிதிகளுடன் 3 தமிழக அமைச்சர்கள் சந்திப்பு? நித்யானந்தா பதிவு கிளப்பிய புதிய சர்ச்சை..!!
    editor5

    Related Posts

    23ம் தேதி ‘ஜனநாயகன்’ ரிலீஸ்.. சும்மா தாறுமாறா கொண்டாடணும்..!! அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தல்..!!

    July 18, 2026

    காவிரி நதிநீர் பங்கீடு: வரும் 22ம் தேதி.. டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!!

    July 18, 2026

    தவெக ஆட்சி கவிழுமா? – அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்… அமைச்சர்  மரிய வில்சன் சாடல்

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    23ம் தேதி ‘ஜனநாயகன்’ ரிலீஸ்.. சும்மா தாறுமாறா கொண்டாடணும்..!! அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தல்..!!

    காவிரி நதிநீர் பங்கீடு: வரும் 22ம் தேதி.. டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!!

    தவெக ஆட்சி கவிழுமா? – அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்… அமைச்சர்  மரிய வில்சன் சாடல்

    பழநி நில மோசடி வழக்கில் என்னை இழுப்பதா? அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்..!

    அமைச்சரவை கூட்டத்தில் விஜய் இதைத்தான் சொன்னார்..!! அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.