Close Menu
    What's Hot

    சென்னைக்கு வரப்பிரசாதம்..!! துறைமுகம்- மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் மும்முரம்..!!

    மாற்றுத்திறனாளி, சிறுவர்கள் மீது தாக்குதல்: தவெகவினரை கட்டுப்படுத்த நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

    இந்த நாடு மக்களுக்கு சொந்தம்.. உங்கள் அப்பா சொத்து இல்ல..!! பிரதமர் மோடியை தாக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»’’விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ – முதலமைச்சர் விஜய்யை எச்சரிக்கும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்
    Featured

    ’’விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ – முதலமைச்சர் விஜய்யை எச்சரிக்கும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 mks
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டது தொடர்பாக எதிர்வினை ஆற்றியுள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கும் தொணியில் கருத்து பதிவிட்டுள்ளார்.

    ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,

    ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு என விமர்சித்துள்ளார்.

    “அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?” என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்? எனச் சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின்,

    கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளதாகச் சாடியுள்ளார்.

    தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? என கடுமை காட்டியுள்ள மு.க.ஸ்டாலின்,  மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன் என வினா எழுப்பியுள்ளார்.

    ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல எனக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின்,  சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences என காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சருக்கும் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்,.

    C Joseph Vijay DMK M.k. stalin Political Warning Tamil Nadu News Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிருதுகள் வழங்குவதில் சாதியா? – விசிக சங்கத்தமிழன் ஆவேசம்!
    Next Article விதி மீறும் தவெகவினர்…கண்டுகொள்ளாத அரசாங்கம் – வானதி சீனிவாசன் விமர்சனம்!
    Editor TN Talks

    Related Posts

    சென்னைக்கு வரப்பிரசாதம்..!! துறைமுகம்- மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் மும்முரம்..!!

    July 21, 2026

    மாற்றுத்திறனாளி, சிறுவர்கள் மீது தாக்குதல்: தவெகவினரை கட்டுப்படுத்த நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

    July 21, 2026

    இந்த நாடு மக்களுக்கு சொந்தம்.. உங்கள் அப்பா சொத்து இல்ல..!! பிரதமர் மோடியை தாக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்..!!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னைக்கு வரப்பிரசாதம்..!! துறைமுகம்- மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் மும்முரம்..!!

    மாற்றுத்திறனாளி, சிறுவர்கள் மீது தாக்குதல்: தவெகவினரை கட்டுப்படுத்த நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

    இந்த நாடு மக்களுக்கு சொந்தம்.. உங்கள் அப்பா சொத்து இல்ல..!! பிரதமர் மோடியை தாக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்..!!

    நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!. பிரதமர் மோடி உறுதி!

    தலைமைச் செயலகத்தில் Enjoy Enjami தெருக்குரல் அறிவு அதிரடி கைது… என்ன நடந்தது?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.