Close Menu
    What's Hot

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மதுரை : மீனாட்சி அம்மன் கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்..! நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்..!
    Featured

    மதுரை : மீனாட்சி அம்மன் கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்..! நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்..!

    Editor web4By Editor web4July 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,
    ” 2021-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில் சொத்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்த ரவிட்டது. அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களுக்கு சொந்தமாக மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக் கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சொத்துகளை முறையாக பராமரித்து பாதுகாக்கவும், மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்தவும் உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

    இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்திருந்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளின் நிலை என்ன, பிரசாத சமையல் அறை எவ்வாறு செயல்படுகிறது உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு இருந்தது. அதன் படி இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, வீரவசந்தராயர் மண்டப பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. புதிய நவீன சமையலறை அமைப்பதற்கான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 10-ந்தேதிக்குள் பணிகள் நிறைவடைந்துவிடும்.

    இந்த கோவிலின் கும்பாபிஷேகம் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். பின்னர் மனுதாரர் ஆஜராகி, மீனாட்சி அம்மன் கோவிலின் ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை. தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் வசூலிக்கப்பட வேண்டிய தொகை வசூலிக்கப்படாமல் உள்ளது என்றார்.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் ED ரெய்டு!. முன்னாள் அதிகாரி சிக்கியது எப்படி?
    Next Article 12 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்!. நீல நிறக் கம்பளமாய் மாறிய மலைப்பகுதி!
    Editor web4

    Related Posts

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    July 21, 2026

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    July 21, 2026

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.