Close Menu
    What's Hot

    சொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்..!! விஜய் குறித்து பிரேமலதா பேச்சு..!!

    டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதல் மைய அரசின் காட்டுமிராண்டித் தனம் – வைகோ கடும் கண்டனம்

    நேற்று பிரதமர் வீட்டில் போராட்டம்!. இன்று கருப்பு உடையில் நாடாளுமன்றம் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!
    Featured

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    Editor web3By Editor web3July 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Dharmapuri mother 3 child dead
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள விவசாயக் கிணற்றில், தாயும் அவரது மூன்று குழந்தைகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தடங்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சரவணனுக்கும் (39),  அம்சா என்ற பெண்ணுக்கும் (35) கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜீவிதா (16), நவீனா (6), குமரன் (3) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 19ஆம் தேதியன்று அம்சாவுக்கும் சரவணனுக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அம்சா, தனது மூன்று குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர்களை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில், நேதாஜியின் விவசாய நிலத்திலுள்ள கிணற்றில் நான்கு பேரின் உடல்களும் மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்புத்துறையினரும் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உடல்களை மீட்டனர்.

    மீட்கப்பட்ட அம்சா மற்றும் மூன்று குழந்தைகளின் வயிற்றிலும் கல் கட்டப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து உடல்கள் பிரேத பரிசோதனைக்காகத் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    dharmapuri mother 3 child dead suicide well
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!
    Next Article நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!
    Editor web3
    • Website

    Related Posts

    சொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்..!! விஜய் குறித்து பிரேமலதா பேச்சு..!!

    July 22, 2026

    டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதல் மைய அரசின் காட்டுமிராண்டித் தனம் – வைகோ கடும் கண்டனம்

    July 22, 2026

    நேற்று பிரதமர் வீட்டில் போராட்டம்!. இன்று கருப்பு உடையில் நாடாளுமன்றம் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள்!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்..!! விஜய் குறித்து பிரேமலதா பேச்சு..!!

    டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதல் மைய அரசின் காட்டுமிராண்டித் தனம் – வைகோ கடும் கண்டனம்

    நேற்று பிரதமர் வீட்டில் போராட்டம்!. இன்று கருப்பு உடையில் நாடாளுமன்றம் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள்!

    ”மாணவர்களின் போராட்டமல்ல, நாடாளுமன்றத்திலும் மாணவர்களிடமும் நடப்பதுதான் ஜனநாயக விரோதம்” – பிரியங்கா காந்தி கடும் தாக்கு  

    பெங்களூருவிலிருந்து கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்தல்!. கோவையில் 5 பேர் கும்பல் கூண்டோடு கைது!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.